அடுத்தடுத்து சூரியன் மற்றும் சனியின் நிலை.. உருவான நவபஞ்சம யோகம்.. தீபாவளிக்குமுன் அதிர்ஷ்டமழையைப் பெறும் ராசிகள்
அடுத்தடுத்து சூரியன் மற்றும் சனியின் நிலை.. உருவான நவபஞ்சம யோகம்.. தீபாவளிக்குமுன் அதிர்ஷ்டமழையைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் ராஜா, சூரிய பகவான் ஆவார். ஒரு வருடத்தில் 12 முறை அதாவது மாதத்திற்கு ஒரு முறை சூரியன் தனது ராசியை பெயர்ச்சி செய்துகொள்கின்றன. இந்த சூரியப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கிறது.
கடந்த அக்டோபர் 17அன்று , துலாம் ராசிக்குள் நுழைந்த சூரியப் பெயர்ச்சி, மற்றும் அடுத்த இடத்தில் இருக்கும் சனி ஆகியவற்றின் தாக்கத்தால், இரண்டு கிரகங்களும் இணைந்து ‘நவ பஞ்சம யோகம்’ உண்டானது. இந்த சூரியப்பெயர்ச்சியால் அடுத்த மாதம் வரை, நவபஞ்சம யோகம் நீடிக்கிறது. இந்த நவபஞ்சம யோகத்தால் அதிக நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
நவபஞ்சம யோகத்தால் அதிக நற்பலன்களைப் பெறும் ராசிகள்:
மேஷம்: நவ பஞ்சம யோகத்தால் மேஷ ராசியில் ஜெனித்தவர்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகின்றன. இந்த தருணத்தில் மேஷ ராசியினர் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளும் லாபகரமாக இருக்கும். பணப்பிரச்னைகள், கடன் தொல்லைகள் ஆகியவைக் குறைந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் இருந்த ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக அரசியல் குறையும். தொழிலில் உங்கள் யுக்தியால் மிதமிஞ்சிய லாபத்தைப் பெறுவீர்கள். சைடு பிஸினஸ் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். சரியாகத் திட்டமிட்டு பிசினஸ் செய்தால் சரியான லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
ரிஷபம்:
நவ பஞ்சம யோகத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு, நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். இந்தக் காலத்தில் கெட்டது விலகி ரிஷப ராசியினருக்கு தொட்டது துலங்கும். உங்களது எதிரிகளின் தொல்லை இந்தக் காலத்தில் குறையும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் ஊக்கத்தொகையாக வந்துசேரும். ரிஷப ராசியினரின் ஆளுமைப் பண்பின் காரணமாக, அதிகளவிலான பணிகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி சுமுகமாக இருக்கும். கடன் பிரச்னைகள் நீங்கும்.வாழ்வில் இருந்த நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நவ பஞ்சம யோகத்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. துலாம் ராசியில் நுழைந்த சூரியனால், துலாம் ராசியினருக்கு மனக்குழப்பங்கள் மறைந்து பணிகளில் உத்வேகம் பிறக்கும். இதனால் தொழில் முனைவோர், வாழ்வில் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். எடுத்த ஆர்டர்களை சொன்ன தேதியில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். துலாம் ராசியினர் தங்களது ஒவ்வொரு பணிகளிலும் மன நிறைவினைப் பெறுவார்கள். உடல்நலனில் அக்கறை அதிகரிக்கும். அயல் மாநிலம் மற்றும் அயல் நாட்டுக்குச் சென்று பொருளாதாரத்தை துலாம் ராசியினர் ஈட்டும் காலம் இது. அதற்கேற்ப நல்ல வாய்ப்புகள் துலாம் ராசியினருக்குக் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்