தமிழ் செய்திகள்  /  Astrology  /  Conjunction Of Venus And Guru Bhagavan And Three Lucky Zodiac Signs

Venus and Guru: கட்டிப்பிடிக்கப் போகும் குரு - சுக்கிரன்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 27, 2024 08:15 PM IST

- குரு மற்றும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

குரு மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை
குரு மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை

ட்ரெண்டிங் செய்திகள்

துலாம்: இந்த ராசியினருக்கு, திருமணத்திற்குப் பெண் பார்க்க முடிவு எடுத்தால் ஏப்ரல் மாதத்தில் பார்க்கலாம். ஏனெனில், இக்கால கட்டத்தில் உடனடியாக இல்வாழ்க்கைத் துணை அமைய வாய்ப்புகள் ஏராளமாகவுள்ளது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவழிபாடு மீது பிடிப்பு வரும். குலதெய்வ வழிபாடு நன்மையைத் தரும். நெடுநாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கை வந்து சேரும். கடை வைத்திருந்தால் புதிதாக கிளை ஒன்றைத் திறப்பீர்கள்.

மேஷம்: இந்த ராசியினருக்கு ஏப்ரல் மாதத்தில் தொழில் பெருகி புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். அரியர் வைத்த கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் எழுதும் தேர்வுகளில் நன்கு படித்தால் ஆல் கிளியர் செய்துவிடுவீர்கள். பணியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் மாதம் இது.

மீனம்: இந்த ராசியினருக்கு இக்காலகட்டத்தில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது.திருமணத்தடை நீங்கும். தோல் மற்றும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து மீள்வார்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தால் மீன ராசியினருக்கு இக்காலகட்டம் நன்மைதரக்கூடிய காலகட்டமாகும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்