வக்ரம் பெறும் செவ்வாய்! 3 ராசிகளுக்கு கவலைகள் ஓடுது! பணம் கொட்டுது! செவ்வாய் வக்ர பெயர்ச்சி பலன்கள்!
கிரகங்களிசெவ்வாய் பகவான் ஆனவர் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 05:01 மணிக்கு வக்ரம் பெறுகிறார். அடுத்து வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரகங்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் வக்ரம் பெற்று பின்னோக்கி நகரும் தன்மைகளை கொண்டு உள்ளது. இந்த கிரகங்கள் வக்ரம் பெறுவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்துகின்றது.
கிரகங்களின் அதிபதி எனப்படும் செவ்வாய் பகவான் ஆனவர் வரும் டிசம்பர் மாதத்தில் வக்ரம் பெறுகிறார். த்ரிக் பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, செவ்வாய் பகவான் ஆனவர் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 05:01 மணிக்கு வக்ரம் பெறுகிறார். அடுத்து வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.
செவ்வாய் வக்ரத்தால் நன்மை பெறும் ராசிகள்:-
1. கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் வக்ர பெயர்ச்சி நன்மைகளை பெற்றுத் தரும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பழைய முதலீடுகளில் இருந்து பணவரவு உண்டாகும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கூடும்.
2. துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் வக்ரம் ஆனது மங்களகரமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். சமய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன பிரச்சனைகள் தீரும்.
3. மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் வக்ர பெயர்ச்சி சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். வீட்டிலும், பணியிடங்களிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பாக படித்து முன்னேற்றம் அடைவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.