Chevvai Peyarchi: செவ்வாய் செங்கோலை சுழற்றுகிறார்! செல்வம் சேரப்போகிறது! இனி இந்த ராசியை கையில் பிடிக்க முடியாது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Peyarchi: செவ்வாய் செங்கோலை சுழற்றுகிறார்! செல்வம் சேரப்போகிறது! இனி இந்த ராசியை கையில் பிடிக்க முடியாது!

Chevvai Peyarchi: செவ்வாய் செங்கோலை சுழற்றுகிறார்! செல்வம் சேரப்போகிறது! இனி இந்த ராசியை கையில் பிடிக்க முடியாது!

Kathiravan V HT Tamil
Jul 25, 2024 05:02 PM IST

Chevvai Peyarchi: மகரம் ராசிக்கு அதிஷ்டம், யோகம், இன்பம், செழிப்பை அளித்தரும் அசுர குருவான சுக்கிரன் வீட்டில் தேவ குருவான குரு பகவான் உள்ளார். இந்த வீட்டில் தற்போது செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகி உள்ளார்.

Chevvai Peyarchi: செவ்வாய் செங்கோலை சுழற்றுகிறார்! இனி இந்த ராசியை கையில் பிடிக்க முடியாது!
Chevvai Peyarchi: செவ்வாய் செங்கோலை சுழற்றுகிறார்! இனி இந்த ராசியை கையில் பிடிக்க முடியாது!

இது போன்ற போட்டோக்கள்

செவ்வாய் பகவான் பெயர்ச்சி 

இந்த நேரத்தில் மேலும் ஒரு சிறப்பாக கடந்த ஜூலை 12ஆம் தேதி நடந்த செவ்வாய் பெயர்ச்சி முக்கியத்துவம் பெற்று உள்ளது. 700 நாட்களுக்கு பிறகு ரிஷபம் ராசியில் செவ்வாய் பகவான் சென்று உள்ளார். இதற்கு முன் ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் இருந்தார். 

சனி பகவான் கருணை தந்து, பூர்வ புண்ணிய பலன்களை அள்ளித்தரும் நிலையில் உள்ளார். நிலத்தின் மீது கடன் பெற்று இருந்தால், அது அடையும். நிலத்தை விற்க முடியாமல் இருந்தால் அதில் மாற்றம் உண்டாகும். மகரம் ராசிக்கு அதிஷ்டம், யோகம், இன்பம், செழிப்பை அளித்தரும் அசுர குருவான சுக்கிரன் வீட்டில் தேவ குருவான குரு பகவான் உள்ளார். 

நிலம் சார்ந்த பிரச்னைகள் தீரும் 

வீட்டை விட்டு வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஏதோ காரணங்களுக்காக வீட்டில் இருந்து தள்ளி இருந்தால், வீடு உங்கள் வசமாகும். 

உங்களை கண்டால் அஞ்சக் கூடிய சூழ் நிலைய கிரகங்கள் அமைத்துவிடும். உங்களின் எதிரிகள் அடங்கும் நேரம் இது. பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றிகளை குவிக்கலாம். விற்காத வில்லக நிலங்கள் கூட விற்று பணமாக கூடிய அமைப்பு இப்போது உண்டாகும். 

திடீர் சொத்துக்களால் செழிப்பு 

திடீர் சொத்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும் தொழில்கள் செழிக்கும். கடனில் சொத்துக்களை வாங்கியவர்களுக்கு செழிப்பு ஏற்படும். 

உங்கள் ஜாதகத்தில் குரு, செவ்வாய் ஆகியோர் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் கூட இந்த நேரத்தில் அற்புத நன்மைகள் உண்டாகும். காதல் திருமணம் நன்மைகளை தரும். காதலில் ஏதேனும் தவறான கண்ணோட்டம், சிந்தனையில் இருந்தால் பிரச்னைகள் ஏற்படும். உங்க புகழுக்கு சேதத்தை ஏற்படுத்தும். 

பூர்வ புண்ணியம் மூலம் அற்புதம் 

மாணவர்களை பொறுத்தவரை குருவின் துணையோடு உழைப்பவர்கள் மிகப்பெரிய உயரங்களை அடையும் நேரம் இது. அடகு வைத்த தங்கம் வீட்டுக்கு வரும், அடகு வைத்த வாகனங்கள் மீண்டும் கிடைக்கும். 

நிலம் சார்ந்த விஷயங்களில் இந்த நேரத்தில் செய்யக்கூடிய மிகச்சிறிய முதலீடு கூட மிகப்பெரிய நன்மைகளை ஏற்படுத்தி தரும். உங்களின் 4ஆம் இடத்தின் அதிபதி 5ஆம் இடத்திலும், 11ஆம் இடத்து அதிபதி 5ஆம் இடத்தில் உள்ளதால் பூர்வ புண்ணியம் மூலம் அற்புத நன்மைகள் கிடைக்கும். 

குழந்தைகள், காதலரிடம் பேசும் போது கணிவு, பணிவு, அன்போடு பேசுங்கள், அவர்களின் உடல்நிலை மீது கவனம் செலுத்துங்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner