Marriage Vastu Tips: திருமணத்தில் தடையா?.. வீட்டில் இதை செய்து பாருங்க.. வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marriage Vastu Tips: திருமணத்தில் தடையா?.. வீட்டில் இதை செய்து பாருங்க.. வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன? - விபரம் இதோ!

Marriage Vastu Tips: திருமணத்தில் தடையா?.. வீட்டில் இதை செய்து பாருங்க.. வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Jul 08, 2024 09:02 PM IST

Marriage Vastu Tips: விரைவில் திருமணம் நடைபெறுவதற்கு எந்த மாதிரியான வாஸ்து குறிப்புக்களை பின்பற்றலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Marriage Vastu Tips: திருமணத்தில் தடையா?.. வீட்டில் இதை செய்து பாருங்க.. வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன? - விபரம் இதோ!
Marriage Vastu Tips: திருமணத்தில் தடையா?.. வீட்டில் இதை செய்து பாருங்க.. வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன? - விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

திருமண தடை நீக்கும் வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கூற்றுப்படி, திருமணத்திற்காக காத்திருக்கும் நபர் ஒரு பெண்ணாக இருந்தால் வடமேற்கு திசையில் தலையை வைத்து தூங்க பரிந்துரைக்கின்றனர். இது திருமண வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

மேலும், திருமணத்தை எதிர்நோக்குபவர் ஒரு ஆணாக இருந்தால், அவர் வடகிழக்கு திசையில் தலையை வைத்து தூங்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தென்கிழக்கில் தலையை வைத்து தூங்கக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

என்ன செய்யக்கூடாது?

திருமண வயதில் இருப்பவர்கள் படுக்கைக்கு அடியில் இரும்புப் பொருட்களை வைக்கக் கூடாது. திருமணம் பற்றி பேசும் நபர் ஒருபோதும் இரும்பு படுக்கையில் தூங்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. இது திருமண வாய்ப்புகளை குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

திருமணம் பற்றி பேசப்படும் வீட்டின் நடுவில் ஒரு படிக்கட்டு இருந்தால் அது நல்ல அறிகுறி அல்ல என்றும் வீட்டின் சுவர்களை வெளிர் நிறமாக மாற்றவும் வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது எந்தவிதமான இருண்ட நிறத்தையும் தவிர்க்கும் என்று கூறப்படுகிறது.

நேர்மறை அதிர்வலைகள்

மேலும், திருமணம் பற்றி பேசும் நபர், அவரது வீட்டினை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதுடன் பொருட்களை அடைத்தது போல் வைக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை அதிர்வலைகள் ஏற்படும்.

எந்த திசையை தவிர்க்க வேண்டும்

திருமணமாகாத பெண்களின் அறை எப்போதும் வீட்டின் வட மேற்கு திசையிலேயே இருக்க வேண்டும். ஒருவேளை அங்கு அமைக்க முடியவில்லை என்றால் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் அமைப்பது மிகவும் சிறப்பானது. தென்மேற்கு திசையை தவிர்ப்பது நல்லது. திருமணம் தாமதமாகும் ஆண்களின் படுக்கை அறை வட கிழக்கு திசையில் அமைப்பது சிறப்பானது. தெற்கு மூலை அல்லது மேற்கு மூலையில் இருப்பதும் மிக சிறப்பானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.