Today Pooja Time: வியாழக்கிழமை யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?.. இன்று பூஜைக்கு உகந்த நேரம், சிறப்புகள் இதோ..!
Today Pooja Time: வியாழக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் மற்றும் இன்றைய நாளுக்கான நல்ல நேரம், ராகுகாலம், பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Today Pooja Time: இன்று 2024 செப்டம்பர் மாதம் 12ம் தேதி வியாழக்கிழமை. பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வாரத்தில் வரும் 7 நாட்களில் வியாழக்கிழமை 'பிரகஸ்பதி' எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. ஒரு ஆண்டில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும்.
குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேய் எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : ஆவணி 27
கிழமை : வியாழக்கிழமை
வளர் -பிறை.
திதி: - நவமி.
இரவு: 07.05 வரை, பின்பு தசமி.
திதி: - நவமி.
இரவு: 07.05 வரை, பின்பு தசமி.
ஸ்ரார்த்த திதி: சுக்ல - நவமி .
நேத்திரம்: 2 - ஜீவன்: 1/2.
கீழ் -நோக்கு நாள்
நக்ஷத்திரம்:
மாலை: 06.31 வரை மூலம் பின்பு பூராடம்.
நாம- யோகம்:
இரவு: 07.57 வரை ஆயுஷ்மான், பின்பு சௌபாக்யம்.
அமிர்தாதி - யோகம்:
காலை 06.03. வரை யோகம் சரியில்லை, பின்பு சித்தயோகம்
௧ரணம்: 03.00 - 04.30.
காலை: 08.14 வரை பாலவம், பின்பு தைதுலம், இரவு 07.05 வரை கௌலவம், பின்பு தைதுலம்.
நல்ல நேரம்:
காலை: 10.45 - 11.45 PM.
கௌரி- நல்ல நேரம்:
மதியம்: 12.15 - 01.15 PM.
மாலை : 06.30 - 07.30 PM.
ராகு காலம்:
பிற்பகல்: 01.30 - 03.00 PM
ராகு காலம்:
பிற்பகல்: 01.30 - 03.00 PM
( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )
ரிய - உதயம்:
காலை: 06.04.- AM.
சூரிய- அஸ்தமனம்:
மாலை: 06.08. PM.
சந்திராஷ்டம- நட்சத்திரம்:
கிருத்திகை, - ரோகிணி.
சூலம்: தெற்கு.
பரிகாரம்: தைலம்.
சந்திராஷ்டம- ராசி:
இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.
ஸ்தல- விஷேசங்கள்:
திருவெற்றியூர் ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.
மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல் படலம்.
சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு தங்க கவசம் வைரவேல் தரிசனம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்