Today Worship: இன்றைய விஷேசங்கள் என்னென்ன?.. வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. ஆன்மீக தகவல்கள் இதோ!
Today Worship: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.
சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதம் இருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. சனி பகவான் பலன்களை கொடுப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் கருதப்படுகிறார். சனி பிரதோஷ நாளில் இருக்கும் விரதத்தின் மூலம், ஒரு நபர் தனது பாவங்களிலிருந்து விடுபடுகிறார், துரதிர்ஷ்டம் முடிவடைகிறது, வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைத் தருகிறது. அந்தவகையில் இன்று (ஜன.11) சனி பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று காலை 08:21 மணிக்கு தொடங்கி நாளை (ஜன.12) காலை 6:33 மணிக்கு முடிவடையும். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், இன்றைய விஷேசங்கள், நல்லநேரம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு அறிவோம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : மார்கழி 27
தேதி: 11.01.2025
கிழமை - சனிக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:33 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 08:15 மணி முதல் 09:00 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 09:30 மணி முதல் 10:20 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
பிற்பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை எமகண்டம்
குளிகை
காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 5:55 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
சுவாதி, விசாகம்
சந்திராஷ்டம ராசி
இரவு: 11.43 மணி வரை துலாம் பின்பு விருச்சிகம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று கிழக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்
இன்றைய விசேஷங்கள்
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் & குற்றம் பொறுத்த நாதர் ஆலயத்தில் மாலை நந்திஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
- நாச்சியார் கோயில் எம்பெருமான் திருக்கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
- சகல சிவாலயங்களிலும் மாலை நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை வழிபாடு.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ சிவபெருமானை வழிபட கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்