Today Pooja Time: வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. ஆன்மீக தகவல்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time: வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. ஆன்மீக தகவல்கள் இதோ!

Today Pooja Time: வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. ஆன்மீக தகவல்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 10, 2025 06:24 AM IST

Today Pooja Time: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பூஜைக்கு உரிய நல்ல நேரம், முக்கிய விசேஷங்கள், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.

Today Pooja Time: வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. ஆன்மீக தகவல்கள் இதோ!
Today Pooja Time: வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. ஆன்மீக தகவல்கள் இதோ!

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். அதேபோல், வெள்ளிக்கிழமையில் அரசமடித்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. இதேபோல், பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கி வந்தால் கஷ்டங்கள் நீங்கி பண வரவு உண்டாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : மார்கழி 26

தேதி: 10.01.2025

கிழமை - வெள்ளிக்கிழமை

சூரிய உதயம்

இன்றைய சூரிய உதயமானது காலை 6:33 மணிக்கு நடைபெறுகிறது

நல்ல நேரம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்

காலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம்

மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்

ராகு காலம்

காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை ராகு காலம்

௭மகண்டம்

மாலை 03:00 மணி முதல் 04:300 மணி வரை எமகண்டம்

குளிகை

காலை: 07:30 மணி முதல் 09:00 மணி வரை குளிகை

(குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய அஸ்தமனம்

மாலை 5:56 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்

சந்திராஷ்டம நட்சத்திரம்

சுவாதி, சித்திரை

சந்திராஷ்டம ராசி

இன்றைய நாள் முழுவதும் துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம்

சூலம்

இன்று மேற்கே சூலம்

பரிகாரம்

இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்

இன்றைய விசேஷங்கள்

  • சகல விஷ்னு ஆலங்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறும்.
  • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு முத்தங்கி சேவை நடைபெறும்.
  • திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்

இன்றைய வழிபாடு

ஸ்ரீ பெருமாளை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

Whats_app_banner