விநாயகர் அருள் வேண்டுமா?.. புதன்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. இன்று நல்ல நேரம் எப்போது? - விரிவான தகவல்கள் இதோ!
2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் நாளான இன்று பூஜைக்கு உரிய நல்ல நேரம், முக்கிய விசேஷங்கள், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பது பழமொழி. அப்படிப்பட்ட புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. புதன்கிழமை புதன் பகவானுக்கு மட்டுமல்லாது, விநாயகர் வழிபாட்டிற்கும் மிக உகந்த நாளாகும். செய்யும் செயல்களில் உள்ள காரியத் தடைகள் நீங்க, புதன்கிழமையில் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும் என்பது ஐதீகம். நீண்ட நாட்கள் நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் புதன்கிழமை விநாயகைர வழிபாட்டால் நிச்சயம் கைகூடும். இந்நாளுக்கு உரிய சிறப்புகள் பற்றியும் இன்றைய நாளில் பூஜைக்கு உகந்த நேரம், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்து இனி பார்ப்போம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : மார்கழி 24
தேதி: 08.01.2025
கிழமை - புதன்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:33 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
பிற்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை எமகண்டம்
குளிகை
பிற்பகல்: 10:30 மணி முதல் 12:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 5:55 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
உத்திரம், ஹஸ்தம்
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்
சூலம்
இன்று வடக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்
இன்றைய விசேஷங்கள்
- திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் திருத்தலத்தில் ஊர்துவதாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி நடைபெறும்
- திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி ரத உற்சவம் நடைபெறும்.
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
- சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் திருக்கோயிலில் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இன்றைய வழிபாட்டின் சிறப்புகள்
- இந்நாளில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, கொண்டைக்கடலை போன்றவற்றை பிரசாதமாக வழங்கலாம்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்