வருவாய் தரும் செவ்வாய்கிழமை விரதத்தின் சிறப்புகள் என்ன?.. இன்று நல்ல நேரம் எப்போது?.. தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!
2025 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாளான இன்றைய நாளின் விரத சிறப்புகள் என்னென்ன, வழிபாடு செய்ய நல்ல நேரம் மற்றும் விரத முறைகள் குறித்த பொதுவான தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

வேத ஜோதிடத்தில், கிரகங்களின் தளபதியான செவ்வாய் மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுகிறார். இவரே ஆற்றல், வீரம், தைரியம், சக்தி ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்நாள் தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகனுக்கும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த சிறப்புமிக்க நாளில் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
செவ்வாய்கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை கடைபிடிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரத்தை 9 செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடித்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.