இன்றைய வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. நல்ல நேரம் எப்போது?.. தமிழ் நாள்காட்டியின் விரிவான தகவல்கள் இதோ!
2025 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் நாளான இன்றைய நாளின் சிறப்புகள், வழிபாடு செய்ய நல்ல நேரம் மற்றும் விரத முறைகள் குறித்த பொதுவான தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
உலகத்திற்கே படியளக்கும் சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவராக கருதப்படுபவர் காலபைரவர். வெற்றி மற்றும் தைரியத்தை கொடுக்கக்கூடிய அவதாரமாகப் பைரவர் விளங்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் கால பைரவருக்கு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. குறிப்பாக திங்கட்கிழமை பைரவர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் பூஜைகள், வேண்டுதல்கள் எல்லாம் மங்களகரமானதாகும் என்பது ஐதீகம்.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் நாளான இன்று பூஜைக்கு உரிய நல்ல நேரம், முக்கிய விசேஷங்கள், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : மார்கழி 22
தேதி: 06.01.2025
கிழமை - திங்கட்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:32 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 9:45 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
மாலை 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 10.30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம்
குளிகை
பிற்பகல்: 01.30 - 03:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 5:54 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
மகம், பூரம்
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் சிம்மம் ராசிக்கு சந்திராஷ்டம்
சூலம்
இன்று கிழக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தயிர் பயன்படுத்தலாம்
இன்றைய விசேஷங்கள்
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். மாலை சோமவார வழிபாடு நடைபெற உள்ளது.
- சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் திருக்கோயிலில் காலை சுவாமி தங்க சூரிய பிரபை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
- திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் திருக்கோயிலில் திரிபுர சம்ஹார லீலை.
- ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆலயத்தில் கஜேந்திர மோட்சம் வைபவ உற்சவம்.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ காலபைரவரை வழிபாடு செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்