தீபாவளி பண்டிகை அன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தீபாவளி பண்டிகை அன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?

தீபாவளி பண்டிகை அன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?

Karthikeyan S HT Tamil
Oct 30, 2024 02:35 PM IST

தீபாவளி திருநாள் அன்று அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து தலைக்கு எண்ணெணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

தீபாவளி பண்டிகை அன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?
தீபாவளி பண்டிகை அன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் என்ன?

தீபாவளி அல்லது தீப ஒளித் திருநாள் என்பது இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். தீபாவளி என்பது வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது அவர் கிருஷ்ணரிடம் கோரிய வரத்தின் படி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய்க் குளியலும் மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன்பாகவே நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். தீபாவளி பண்டிகையான நாளை அக்டோபர் 31, (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் குரு ஹோரையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும். சூரிய உதயம் தோன்றுவதற்குள் வீட்டில் உள்ள அனைவரும் குளிக்க வேண்டும். பூஜை அறையில் புத்தாடைகளை வைத்து குடும்பத்தின் பெரியவர்களிடம் ஆசி பெற்று விட வேண்டும். காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சுக்ர ஹோரையில் புத்தாடை உடுத்தி தீபாவளி வழிபாடு செய்திடவும் உகந்த நேரம் ஆகும்.

நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமா தேவியும், குங்குமத்தில் கௌரியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பது ஐதிகம். எனவே தான் எண்ணெய்க் குளியல் நீராடலை கங்கா ஸ்நானம் என புனிதமாக அழைக்கின்றனர். தீபாவளி பண்டிகையன்று லட்சுமி குபேர பூஜை செய்யும் வழக்கமும் சிலருக்கு உண்டு.

தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌ :

இந்தாண்டு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் அமாவாசை திதி வருவதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேத நாட்காட்டியின்படி, இந்த முறை அமாவாசை தேதி அக்டோபர் 31 ஆம் தேதி மதியம் தொடங்கி, மறுநாள் அதாவது நவம்பர் 1 ஆம் தேதி மாலை முடிவடைகிறது. 

அமாவாசை திதி, 31 ஆம் தேதி மதியம் 2:40 மணிக்கு துவங்கி, நவம்பர் 1ஆம் தேதி மாலை 4:42 வரை நடக்கிறது. இதன் பிறகு பிரதிபத திதி நடைபெறும். வேத நாட்காட்டியின்படி, அமாவாசை திதியில் தீபாவளியன்று லட்சுமி பூஜையும், பிரதோஷ காலத்தின் போது மாலையிலும் இரவிலும் அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இரவு வரை லட்சுமி பூஜை செய்வது வழக்கம்.

அமாவாசை திதி நவம்பர் 1ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. எனவே, நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளியைக் கொண்டாடுவது அசுபமாகவும் மங்களகரமற்றதாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி இலங்கை, மியான்மர், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்