Today Rasi Palan: ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்!

Today Rasi Palan: ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்!

HT Tamil Desk HT Tamil
Published Feb 25, 2023 07:21 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ராசி பலன்
ராசி பலன்

இது போன்ற போட்டோக்கள்

மேன்மை உண்டு, நல்ல காரியங்கள் நடக்கும். குறிப்பாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய வாய்ப்புகள் கூடி வரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பண வரவு தேடி வரும். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

ரிஷபம்

லாபங்கள் கூடிவரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தாயார் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சித்த காரியங்கள் வெற்றி கூடும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். தெய்வீக வழிபாடு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் சில சட்டச் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். தாயார் உடல்நலத்தில் அக்கறை தேவை. பண விவகாரங்களில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

சிம்மம்

இன்றைய நாளில் அசதி இருக்கும். பலவிதமான சிந்தனைகள் கொண்ட நாளாக இன்றைய தினம் இருக்கும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி

அப்பா, பெரியப்பா, சித்தப்பா உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். இடமாற்றம், படிப்பு தொடர்பாக முயற்சி செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பயணத்தில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம்.

துலாம்

சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருந்தாலும் வேலையில் வரும் பிரச்னைகளை எளிதில் தீர்த்து வெற்றி பெறுவீர்கள். தெரியாமல் செய்துவிட்டேன் என சொல்லும் வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நல்ல தினமாக இருக்கும். நீங்கள் வேலையில் இன்று மிகவும் பரபரப்பாக இருக்கலாம். தங்களின் தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

தனுசு

உங்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். குடும்ப வேலையை பொறுப்புடன் நிறைவேற்றுங்கள். உங்கள் மனம் அமைதியால் நிறைந்திருக்கும்.

மகரம்

தடைப்பட்ட பணிகளை எளிதாக முடிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகமாக இருக்கும். மாணவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைப் பெறுவார்கள்.

கும்பம்

வரவுகள் கூடிய வரக்கூடிய நாள். சாப்பாடு விஷயத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் எவ்வளவு அமைதியாக வேலை செய்கிறீர்களோ, அந்த நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வருத்தங்கள் தீரும். இன்றைய நாள் மகிழ்ச்சியாகவும் சுகபோகமாகவும் வாழக்கூடிய நாளாகும்.