Murugan Worship: 9 செவ்வாய்க் கிழமைகள் முருகனுக்கு விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாருங்கள்..!
Murugan Worship: தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமானை மனதில் நினைத்து 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து வாழ்க்கை வளம் பெறும்.

தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம். செவ்வாய் கிழமையில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை முருகனை பயபக்தியோடு மனதில் நினைத்து விரதம் இருந்து வர கடன் பிரச்னைகள் நீங்கி நம் வீட்டில் செல்வம் பெருக ஆரம்பிக்குமாம். வருவாய் தரும் செவ்வாய் என்றே முன்னோர்கள் இதை அழைத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறை
செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடித்து, அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை கடைபிடிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரத்தை 9 செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடித்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும்.
வழிபடும் முறை
விரத நாட்களில் முருகனுக்குப் பிடித்த காவி ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிறத்தில் நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் கிழமைகளில் பன்னீர் பாட்டிலை முருகன் கோயிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து வரவும். வழிபாட்டின் போது முருகனின் வேல் வைத்து வழிபடுவது நல்லது. மேலும் நாம் விரதம் இருக்கும் போது வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் படத்தை வைத்து வணங்குவது சிறந்தது. விரதத்தை தொடங்கும் போது முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.
முருகனைவழிபட சிறந்த மந்திரம்
முருகனை வழிபட சிறந்த மந்திரம் "ஓம் சரவணா பவ " என்பதாகும். "ஓம்" என்பது பிரணவத்தை குறிக்கிறது, "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ரா" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ" என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியத "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது மற்றும் "வ" என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
விரத பலன்கள்
மேற்சொன்ன விரத நாட்களிலும் மக்கள் காலையில் நீராடி நித்தியக் கடன்களை முடித்து, ஆலயம் சென்று முருகப் பெருமானை வழிபட்டால் இம்மையில் எல்லா நன்மைகளையும் பெற்று மறுமையில் பேரானந்தப் பெருவாழ்வைப் பெறுவார்கள் என்று கந்தபுராணம் கூறுகிறது. விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்