Dharmakarmadhipati Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ தலைமை பதவி தேடி வரும் தர்ம கர்மாதிபதி யோகம் யாருக்கு?
”Dharmakarmadhipati Yogam: இந்த யோகம் உள்ளவர்களிடம் எந்த பொறுப்பை கொடுத்தாலும் எளிதில் தலைமை பதவிக்கு எளிதில் வந்துவிடுவார்கள்”

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் தர்மகர்மாதிபதி யோகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒரு மனிதன் எல்லா வளங்களையும் பெற்று வாழக்கூடிய யோகத்தை முதல்தர யோகமான தர்மகர்மாதிபதி யோகம் வழங்குவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒருவரது ஜாதகத்தில் உள்ள தர்ம ஸ்தானம் எனப்படுகின்ற 9ஆம் இடமும், கர்ம ஸ்தானம் எனப்படுகின்ற 10 ஆம் இடமான தொழில் ஸ்தானமும் ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஒருவரின் தலைமை பதவியை நிர்ணயம் செய்வதில் லக்னத்திற்கு 9ஆம் இடமும், 10ஆம் இடமும் மிகவும் முக்கியமானதாக உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
9ஆம் இட அதிபதியும், 10ஆம் இட அதிபதியும் ஒன்றாக இருந்தால் அதுவே தர்ம கர்மாதிபதியோக என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
இந்த யோகம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாளில் அதீத பொருளை ஈட்டி புகழ்பெரும் தன்மை உண்டு. தர்மகர்மாதிபதியோகம் பெற்றவர்களின் ஆணைக்கு எவரும் எதிர்ப்பு காட்டாமல் பணிவார்கள். இவர்களிடம் எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதனை வென்று முடித்துவிட்டு மிக எளிதில் தலைமை பதவிக்கு வந்துவிடுவார்கள்.
தர்மகர்மாதிபதி யோகம் உள்ளவர்களுக்கு, வாழ்க்கையில் தர்மம் மற்றும் கடமை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குவர்.
இவர்கள் நேர்மையானவர்கள், நீதி நெறிகளைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புபவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைய கடினமாக உழைப்பார்கள்.
இந்த யோகம் பெற்றவர்கள், தர்மம் மற்றும் கடமை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். நேர்மையானவர்கள், நீதி நெறிகளைப் பின்பற்றுபவர்கள். சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புவார்கள். உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைய கடினமாக உழைப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

டாபிக்ஸ்