தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Career Astrology: 'மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொழிக்கவும், புகழ் செழிக்கவும் சுக்கிரன் தரும் தொழில்கள்!

Career Astrology: 'மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொழிக்கவும், புகழ் செழிக்கவும் சுக்கிரன் தரும் தொழில்கள்!

Kathiravan V HT Tamil
Jun 13, 2024 06:10 AM IST

காதல், அழகு, செல்வம், கலை மற்றும் இன்பம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக சுக்கிரன் உள்ளார்.

'மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொழிக்க சுக்கிரன் தரும் தொழில்கள்!
'மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொழிக்க சுக்கிரன் தரும் தொழில்கள்!

சுக்கிரன் தரும் நன்மை தீமைகள்

அழகான தோற்றம், கலை மற்றும் இசையில் திறமை, செல்வம் மற்றும் செழிப்பு, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் ஆகிய நற்பலன்களையும், காம உணர்ச்சிகளில் அதிக கவனம்ம் அலங்காரத்தில் அதிக செலவு, சோம்பேறித்தனம், பொறாமை மற்றும் வெறுப்பு, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஆகிய தீய பலன்களை தரும் கிரகமாகவும் சுக்கிர பகவான் உள்ளார். 

அசுர குருவான சுக்கிரன் 

ஒருவருக்கு சுக்கிரன் யோகம் தந்தால், குபேரனை போல் செல்வச்செழிப்புடன் வாழும் நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறன. ஜோதிடத்தில் குரு பகவானுக்கு உள்ள ஆற்றல், சுக்கிரனும் உண்டு. தேவர்களுக்கு குருவாக குரு பகவானும், அசுரர்களுக்கு குருவாக சுக்கிரனும் உள்ளனர். 

சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற நபர்கள் என்ன நடந்தாலும் காரியம் ஆக வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். அழகு உணர்ச்சி மிக்கவர்களான இவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். 

ஆதிக்கம் தரும் அழகு சார்ந்த தொழில்கள் 

எனவே அழகுசார்ந்த தொழில்கள் இவர்களுக்கு மேன்மை தரும், உதாரணமாக அழகுசாதன பொருட்கள், ஆடைகள், அழகை கூட்டும் பொருட்கள், வாசனை திரவியங்கள், நகைகள், அணிகலன்கள், ஆடம்பர பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவை சுக்கிரனின் காரகத்துவம் பெற்று விளங்குவதால், மேற்கண்ட தொழில்களை செய்யும்போது ஜாதகர் லாபத்தை அடைவார். 

சினிமா துறை 

வாகனகாரகனாகவும் சுக்கிரன் உள்ளர் என்பதால் வாகனத்தை கொண்டு செய்யக்கூடிய தொழில்கள் லாபம் தரும். மக்களை மகிழ்விக்கும் சினிமா, இயல், இசை, நடனம் நாட்டியம் தொடர்பான தொழில்கள் மூலம் ஜாதகருக்கு புகழ் உண்டாகும் தன்மையை சுக்கிரன் அளிப்பார். நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசைக்கலைஞர், நடனக் கலைஞர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றவராக இருப்பார். 

மக்களை மகிழ்விக்கும் சுக்கிரன் 

சிகை அலங்காரம், அழகுக்கலை நிபுணர், ரெஸ்டாரண்ட், ஸ்டார் ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்சி, சுற்றுலா கைடு உள்ளிட்ட தொழில்கள் சுக்கிரனை சார்ந்தது.    

மக்களை மகிழ்விக்கும் அனைத்தும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். சினிமா தியேட்டர்கள், உயர்தர பார்கள், சூதாட்ட விடுதிகள், உயர்தர ஹோட்டல்கள், ஆடம்பர பங்களாக்கள் விற்பனை, நகை அலங்கார வேலைப்பாடுகள் ஆகியவை சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவை ஆகும். 

வங்கி ஊழியர், நிதி ஆலோசகர், பங்குச் சந்தை தரகர், ரியல் எஸ்டேட் ஏஜென்ட், விற்பனை பிரதிநிதி, விளம்பர நிறுவனம், பொதுத் தொடர்பு நிறுவனம் உள்ளிட்டவற்றிலும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்து உள்ளது. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.