தமிழ் செய்திகள்  /  Astrology  /  Can I Reach Out And Buy An Annadhanam From Someone Else Does It Add Sin To Us

Annadhanam: பிறர் தரும் அன்னதானத்தை கை நீட்டி வாங்கலாமா? அது நமக்கு பாவத்தை சேர்க்குமா? அன்னதானத்தை எப்படி வாங்கணும்?

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 02, 2024 12:48 PM IST

Annadhanam: நாம் ஒருவரிடம் கை நீட்டி யாசகம் பெரும் போது நமது கர்வம் நீங்கும். இறைவனை நாம் அடைவதை தடுக்கும் ஒரு விஷயம் கர்வம். அதனால் தான் நம் முன்னோர்கள் நமது கர்வமும், ஆணவமும் போக கோயில்களில் நல்ல நாட்களில் கொடுக்கம்படும் அன்னதானத்தை வாங்க வேண்டும் என்று வழக்கம் வைத்தார்கள்.

பிறர் தரும் அன்னதானத்தை கை நீட்டி வாங்கலாமா?
பிறர் தரும் அன்னதானத்தை கை நீட்டி வாங்கலாமா?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த உலகில் தானத்தில் மிகச் சிறப்பாக பார்க்கப்படுவது அன்னதானம்.

2021ம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி நாட்டில் ஆரோக்கியமான உணவு இல்லாமல் 74.1 சதவிகித மக்கள் அவதியடைகின்றனர். இப்படி உணவு இல்லாமல் யாரும் வருத்தக் கூடாது என்ற நோக்கம் நம் மக்களிடையே தொன்று தொட்டு அன்னதான வழக்கம் இருந்து வருகிறது. இதனால் தான் முடிந்த வரை கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசே பல கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. 

அதேசமயம் பெரும்பாலான மக்கள் இன்று பிறந்தநாள் நினைவு நாள் போன்ற நாட்களில் அன்னதானம் செய்வதை வழக்கம் ஆக்கி கொண்டுள்ளனர். ஆனால் இப்படி செய்யப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட கூடாது. அன்னதானம் ஒருவர் தன் பாவத்தை போக்க கொடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதால் நமக்கு பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆத்ம ஞானம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி கூறியிருப்பதாவது,

ஒருவர் அன்னதானம் செய்யும் செய்யும் போது ஒருவரின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும். ஆனால் நாம் கை நீட்டி அன்னதானத்தை வாங்கும்போது நமக்கு அற்த பாவங்கள் வராது. மாறாக நமது கர்ம வினைகள்தான் குறையும்.

மடாதிபதிகளுக்கு கூட சில மடங்களில் ஒரு சில நியதிகள் உண்டு. மடாதிபதிகளில் பெரும் துறவிகளாக இருப்பவர்கள் கூட அன்றாடம் கையேந்தி தங்களது உணவுகளை பெற்று  கொள்ள வேண்டும். யாசகத்தில் இருந்து பெரும் விஷயத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நியதி உண்டு.

புரட்டாசி மாதத்தில் போடக்கூடிய தளியல் படையலுக்கு வீடு வீடாக சென்று கை நீட்டி யாசகம் வாங்கிதான் அந்த அரிசியில் பெருமாளுக்கு தளியல் போட வேண்டும் என்பது ஐதீகம் .

அதற்கு காரணம் நாம் ஒருவரிடம் கை நீட்டி யாசகம் பெரும் போது நமது கர்வம் நீங்கும். இறைவனை நாம் அடைவதை தடுக்கும் ஒரு விஷயம் கர்வம். அதனால் தான் நம் முன்னோர்கள் நமது கர்வமும், ஆணவமும் போக கோயில்களில் நல்ல நாட்களில் கொடுக்கம்படும் அன்னதானத்தை வாங்க வேண்டும் என்று வழக்கம் வைத்தார்கள்.

அன்னதானத்தை வாங்குவதற்குவதற்கு ஒரு முறை உள்ளது. சிலர் அன்னதானத்த ஒற்றை கையால் வாங்குகின்றனர். அது தவறு எப்போதும் இரண்டு கைகளை நீட்டி பவ்யமாக அன்னதானத்தை வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது நான்தான் உயர்ந்தவன் என்ற கர்வம் நீங்கும். இறைவன் நமது கர்ம வினைகளை தீர்த்து வைப்பார்.

பாவம் எப்போது வரும் பாருங்க

அன்னதானத்தை வாங்கி அது சுவையாக இல்லை என்றால் தூக்கி கீழே போட்டால் அது நமக்கு பாவத்தை தரும். எப்போது நாம் வாங்கும் அன்னதானத்தை வீணாக்க கூடாது. வேண்டாம் என்றும் செல்லக்கூடாது. என்ற அவர் கூறி உள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்