தமிழ் செய்திகள்  /  Astrology  /  Cable Car From Bombay To Sannidhanam To Transport Goods To Sabarimala

Sabarimala: சபரிமலையில் கேபிள் கார் - புதிய ஒப்பந்தம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2023 07:01 PM IST

சபரிமலையில் பொருட்கள் கொண்டு செல்வதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணி ஒப்பந்தமாகி உள்ளது.

சபரிமலை
சபரிமலை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக அடிவாரமான பம்பையில் இருந்து டிராக்டர் மூலம் கோயிலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த டிராக்டர்கள் மலைப் பாதையில் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோயிலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல கேபிள் கார் திட்டம் செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டக் குறித்து உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கேபிள் கார் அமைக்க அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் கிடைத்த பிறகு கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மண் ஆய்வுப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த மண்ணாய்வு பணி முடிந்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்