நவம்பர் 27-இல் வக்ரம் பெறும் புதன்! ’துலாம் முதல் மீனம் வரை!’ புதன் வக்ர பெயர்ச்சி பலன்கள்!
நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் நவம்பர் 27 ஆம் தேதி விருச்சிகம் ராசியில் வக்ரம் பெறுகிறார்.
Budhan Peyarchi: ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், அறிவுக்கூர்மை, நட்பு ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார்.
நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் நவம்பர் 27 ஆம் தேதி விருச்சிகம் ராசியில் வக்ரம் பெறுகிறார்.
புதன் பகவான் வக்ரம் பெறும் நிலையில் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களை தற்போது அறிந்து கொள்வோம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் புதன் வக்ரம் பெறுவதால் முழு நம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள்.ஆனால் உங்கள் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணியிடத்தில் உயர்பதவிகள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரம் அடைவதால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். கலை மற்றும் இசையில் ஆர்வம் கூடும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாபம் அதிகரிக்கும். மரியாதை கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரத்தால் மனதில் மகிழ்ச்சி தங்கும். செயலில் பொறுமை காக்கவும். உரையாடலில் பொறுமையாக இருங்கள். தேவையற்ற சண்டைகளை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புடன் இருங்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் மனம் கலங்காமல் இருக்கும். பொறுமையாக இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணிச்சுமை அதிகம் இருக்கும். வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரலாம். செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் நேர்மறை சிந்தனை உடன் செயல்படும் போது வெற்றிகள் கிடைக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் பணம் கொடுத்து உதவுவார்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகளால் மனம் கலங்கலாம். முழு நம்பிக்கை உடன் செயல்படுங்கள். குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள். வாகன வசதிகள் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.