Budhan Peyarchi Rasipalan 2024: நாளை புதன் பெயர்ச்சி! மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Budhan Peyarchi Rasipalan 2024: தற்போது புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்மம் ராசியில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
Budhan Peyarchi Rasipalan 2024: நவக்கிரகங்களின் ஒருவரான புதன் பகவான் 21 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியில் இருந்தும் இடம்பெயர்வார். புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, தர்க்கம், நட்பு ஆகியவற்றின் காரகத்துவ கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார்.
தற்போது புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்மம் ராசியில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், உங்கள் பார்வையைப் பற்றி உலகிற்குச் சொல்லவும், உங்கள் தலைமைத்துவ திறன்களை வளர்த்து கொள்ளவும், சூழ்நிலையை எளிதில் கையாளவும், மக்களை ஊக்குவிக்கவும் புதன் பெயர்ச்சி காரணமாக இருக்கும். நீங்கள் குறிப்பாக வசீகரமாகவும் நகைச்சுவையாகவும் இருப்பீர்கள். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு வரன் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக பழகுவீர்கள். வீட்டில் ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் கருத்து கேட்பதற்கும், உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கும் தைரியம் இருப்பது முக்கியம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் புதிய திட்டங்களை உருவாக்க இது சரியான நேரம். உங்கள் எண்ணங்களை நீங்கள் நன்றாக வெளிப்படுத்துவதால் உங்கள் எழுத்துத் திறன் கூடும். உங்களுடைய அழகும், ஆளுமையும் கூடும் என்பதால் காதல் வயப்படுவீர்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் அதிக நம்பிக்கையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவீர்கள். அலுவலகங்களில் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மகிழ்ச்சி கிடைக்கும். வேலை தேடுபவர்கள் நேர்காணல்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் இந்த காலத்தில் உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. புதிதாக ஒன்றைத் தொடங்கவும், ஆக்கப்பூர்வமாக இருக்கவும் முடிவுகளை எடுப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களும்க்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் முழுமையடையாத வேலைகளை முடிக்க இது ஒரு நல்ல நேரம். இருப்பினும், அலுவலக வதந்திகள் அல்லது தவறான புரிதல்களை தீர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் மூலம் வாழ்கை துணை அமையும். இந்த காலகட்டத்தில் உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்படும். திருமணம் ஆகாத துலாம் ராசிக்காரர்களுக்கு வரன்கள் கிட்டும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் உங்கள் தொழிலில் அதிக உறுதியுடன் இருங்கள். உங்கள் பணி வாழ்க்கையில் அதிகக் கட்டுப்பாட்டை பின்பற்றவும். உங்கள் கவனத்தை குவிக்க இது ஒரு நல்ல நேரம். நீங்கள் இப்போது அதிக முடிவெடுக்கும் சக்தியைப் பெற்றுள்ளீர்கள், எனவே நீங்கள் நினைக்கும் கருத்துக்களை வெளிப்படையாக கூறுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வதில் உங்கள் சிந்தனை திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆழமான உரையாடல்கள், பிற கலாச்சாரங்களைப் பற்றி கற்றுக்கொள்வது, புத்திசாலி ஆக்கும் விஷயங்களில் ஈடுபாடு செலுத்துவது நன்மைகளை தரும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் வேலை தேடுவது, அதிகாரத்தில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளுதல், பாரம்பரியமற்ற தொழில்களை கருத்தில் கொள்ளவும் தயங்க வேண்டாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்க சிறந்த நேரம் ஆக இருக்கும். தனிப்பட்ட திறன்கள் மேம்படும். சீனியர்கள் உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கையின் அணுகுமுறையில் வெளிப்படையாக இருங்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு விளக்கும் திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பணிகள் ஒதுக்கப்படலாம். அதிக சிந்தனை மற்றும் உரையாடல் தேவைப்படும்.