’5 ரூபாய் நாணயத்தை கொண்டு வீட்டில் பணம் கொட்ட வைக்க முடியுமா?’ செல்வம் சேர்க்கும் குபேர வழிபாடு!
பெருத்த வயிறு, சிரித்த முகத்தோடு, பொன், பொருட்கள் அடங்கிய செல்வ வளத்தோடு குபேர பகவான் அமர்ந்து இருப்பார். செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியான வாழ்கை வாழ குபேர கடாட்சம் முக்கியமானது.
செல்வத்தின் அதிபதியான குபேரன் ஆனவர் பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர். குரு பகவானுக்கு உரிய வியாழன் கிழமை அன்று மாலை 6.30 மணியை குபேர நேரம் என்று அழைக்கப்படுகின்றது. 72ஆம் எண் ஆனது குபேரனுக்கு உரிய எண் ஆகும். குபேரனுக்கு உரிய வாகனமாக கீரி உள்ளது.
பணம் தரும் குபேர வழிபாடு
வீட்டில் செல்வம் சேர, பணமழை பெற குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை. பொதுவாக குபேரர் ஒரு நாணய பிரியர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இதனால் குபேரரை வழிபடும் போது நாம் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது குபேர வழிபாடுகளில் மிக முக்கியமானது ஆகும்.
குபேர வழிபாடு செய்யும் முறைகள்
பெருத்த வயிறு, சிரித்த முகத்தோடு, பொன், பொருட்கள் அடங்கிய செல்வ வளத்தோடு குபேர பகவான் அமர்ந்து இருப்பார். செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியான வாழ்கை வாழ குபேர கடாட்சம் முக்கியமானது. வளர்பிறை விழாயன் கிழமை அன்றோ அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலோ மாலை 6.30 மணி அளவில் உங்களது வீட்டில் குபேரனின் படம் அல்லது குபேர இயந்திரத்தை வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். 55 எண்ணிக்கையில் 5 ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளவும். தனித்தனியாக உள்ள வில்வ இலைகள் மீது சந்தனம் தடவிக் கொள்ளவும். 2 அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை கொண்டு தாமரை தண்டு திரி மூலம் விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு 5 ரூபாய் நாணயம் மற்றும் ஒரு வில்வ இலையை எடுத்துக் கொண்டு குபேரனின் படம் முன்னரோ அல்லது குபேர இயந்திரத்தின் முன்னோ ’ஓம் குபேராய நமக’ என்று அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்த நாணயங்களை கொண்டு தங்கம், வெள்ளி, வீடு, வாகனம் வாங்கும் போது வீட்டில் குபேர சம்பத்து பெருகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.