Tamil News  /  Astrology  /  Best Vastu Tips For Money Plant In Home

Vastu Tips: வீட்டில் செல்வத்தை பெருக்குமா மணி பிளான்ட்? இதோ வாஸ்து டிப்ஸ்!

Karthikeyan S HT Tamil
Mar 13, 2023 04:09 PM IST

வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்டை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மணி பிளான்ட்
மணி பிளான்ட்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைக்கு பலருக்கும் வாஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஏதேனும் சம்பந்தம் இல்லாமல் அசம்பாவிதம் நடந்தால், உடனே அனைவரது மனதிலும் முதலில் தோன்றுவது "வாஸ்து சரியில்லையோ?" என்னும் வார்த்தை தான். அந்த வாஸ்து ஒரு வீட்டைக் கட்டுவது மற்றும் வீட்டில் என்னென்ன புனிதமான பொருட்களை வைக்க வேண்டும் என்பது பற்றிய விரிவான தகவல்களை நமக்கு வழங்குகிறது.

பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றியும், வாஸ்து சாஸ்திரத்தின் குறிப்புகள் படியும் வீடு மற்றும் அலுவலகத்தை எவ்வாறு அமைப்பது நமக்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த கட்டுரையில் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வாஸ்து படி, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை பெரும்பாலானோர் மத்தியில் ஒரு கருத்தாக இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என கருதப்படுகிறது. காயின் செடிகள் அல்லது மணி பிளான்டில் இருவகைகள் உள்ளன. 

முதல் வகை அசல் மற்றொன்று போலி. பழைய சீனி அல்லது இந்திய நாணயங்களைப் பயன்படுத்தி போலி நாணய காயின் செடிகளும் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. உங்களிடம் அசல் காயின் செடி இருந்தால், காய்ந்த இலைகளை உடனடியாக துண்டித்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுவதன் மூலமும், சரியான பராமரிப்பின் மூலமும் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

பண வரவை தரக்கூடிய மணி பிளான்ட்டை வளர்க்க நினைப்பவர்கள் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் கூற்றுப்படி மணி பிளான்ட்டை தென் மேற்கில் வைப்பது விஷேசம் ஆகும். வீட்டில் எல்லா இடங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது தான் லட்சுமி குடியேறுவாள். படுக்கையறையில் மணி பிளாண்ட்டை வைப்பது வீட்டில் நேர்மறையை அதிகரிக்கும்.

WhatsApp channel