Guru Peyarchi 2024 Anusham:தொழில் தொடங்க நல்ல நேரம்! அனுஷம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Anusham:தொழில் தொடங்க நல்ல நேரம்! அனுஷம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Anusham:தொழில் தொடங்க நல்ல நேரம்! அனுஷம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 01, 2024 08:44 PM IST

சனியின் ஆதிக்கம் கொண்ட அனுஷம் நட்சத்திரம் நான்கு பாதங்களும் விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. எதிர்வரும் குரு பெயர்ச்சியால் ஸ்வாதி நட்சத்தினர் பெறப்போகும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அனுஷம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்
அனுஷம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சியால் அனுஷம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

அனுஷம் நட்சத்தினர் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள். சனி பகவான் கோச்சாரத்தில் தற்போது கும்பம் ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். அனுஷம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் விருச்சிக ராசியில் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் இருந்த துன்பம், நோய், கடன் பிரச்னை முடிவுக்கு வரும் காலமாக இந்த பெயர்ச்சி உள்ளது. குழப்பமான மனநிலை நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளதாராத்தை பொறுத்தவரை போதிய அளவில் பணப்புழக்கம் இருக்கும். வருமானமும் உண்டு.

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நீண்ட நாள்களாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் நல்ல வாயப்புகள் அமையும்.

எடுக்கும் காரியங்களில் தடை இருந்தாலும் இறுதியில் வெற்றியை பெறுவீர்கள். விரும்பிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு. சொந்தமாக சொத்து வாங்குவதற்கான சூழலும் உருவாகும்.

திருமணம் தள்ளி போனவர்கள், வரன் அமையாமல் இருந்தவர்கள், திருமணத்தின் மீது நாட்டம் இல்லாதவர்களுக்க இந்த குரு பெயர்ச்சி திருமண யோகத்தை கொடுக்கும்.

உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் யார் என்பதை இனம் காண்பீர்கள். உடல் நிலை ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அடிக்கடி சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உடலில் அக்கறை செலுத்துங்கள்

வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்னை இருக்காது. பணி நிமித்தமான பயணம், இடம்மாற்றம் வரலாம். சக ஊழியர்களுடன், மேலதிகாரியுடன் ஒத்து போகும் சூழ்நிலை அமையும்.

உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். பிற மொழி பேசுபவர்களால் நற்பலனை பெறலாம்.

தசாபுத்தி பலன்கள்

புதன் திசையில் இருப்பவர்கள் (30 வயது வரை) மாணவர்களுக்கு படிப்பில் இருந்து வந்த தொல்லை, மனஅழுத்தங்கள் நீங்கும். அதற்கு ஏற்ப வளர்ச்சியை பெறுவீர்கள். வேலை தேடுவோருக்க எதிர்பார்த்த இடத்தில் வேலைகள் அமையும். தொழில் செய்வோருக்கும் நல்ல வருமானம் உண்டு. திருமண முயற்சிகளில் வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்.

கேது திசையில் இருப்பவர்களுக்கு (37 வயது வரை) இதுவரை இருந்து வந்த பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு சரியான காலமாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

சுக்கிர திசையில் இருப்பர்களுக்கு (50 வயது வரை) சிறந்த காலமாக உள்ளது. உடலில் இருந்து நோய் பாதிப்புகள் நீங்கும். மருத்துவ ரீதியாக இருந்து வந்து செலவீனங்கள் குறையும். வாகனங்கள், பணம் சேர்க்கை உண்டு. வீடு கட்டும் யோகமும் உள்ளது. பிள்ளைகளின் எதிகாலத்துக்கு உதவுவீர்கள்.

சூரிய திசையில் இருப்பவர்கள் (63 வயது வரை) தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிரச்னைகள் தீர்வுக்கு வரும்

சந்திர திசையில் (73 வயது வரை) இருப்பவர்களுக்கு நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். இடமாற்றம் உண்டு. தீய பலன்கள் விலகும். நிதி பற்றாக்குறை விலகும்.

செவ்வாய் திசையில் (80 வயது வரை) இருப்பவர்கள் வளர்ச்சியை பெறுவீர்கள். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வேலை ரீதியாக அலைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்