தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Best Co-workers : இந்த ராசிக்காரர்கள் கூட்டணி சேர்ந்தால், அலுவலக பணிகளில் அசத்தலாம்!

Best Co-workers : இந்த ராசிக்காரர்கள் கூட்டணி சேர்ந்தால், அலுவலக பணிகளில் அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 20, 2024 07:30 AM IST

Best Co-workers : இந்த ராசிக்காரர்கள் கூட்டணி சேர்ந்தால், அலுவலக பணிகளில் அசத்தலாம்!

Best Co-workers : இந்த ராசிக்காரர்கள் கூட்டணி சேர்ந்தால், அலுவலக பணிகளில் அசத்தலாம்!
Best Co-workers : இந்த ராசிக்காரர்கள் கூட்டணி சேர்ந்தால், அலுவலக பணிகளில் அசத்தலாம்!

நாம் அனைவருக்கும் நல்ல பணியிடம் வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். அதற்கு நமது குழுவினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அது பணி, அலுவலகம் இரண்டையும் முன்னேற்றும். அதற்கு இந்த ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் நன்மை பயக்கும். சில ராசியினருக்கு நேர்மறையாக பணி அணுகுமுறை, சிறப்பாக மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, ஒத்துழைத்து பணி புரியும் சூழல் ஆகியவை இருக்கும். எந்த ராசியினர் சேர்ந்தால் பணியில் முன்னேற்றம் இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

இதுபோல் இணக்கமான பணிச்சூழல் உருவானால், நமது பணி மிகவும் சிறப்பாகதாக அமையும். 

துலாம்

இவர் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் சமாளித்து செல்வார்கள். இவர்கள் பணியிடத்தில் நல்ல ஒரு சூழலை உருவாக்குவார்கள். குழுவில் ஒரு சமநிலையை உருவாக்குவார்கள். இவர்கள் குழுவாக சேர்ந்து சிறப்பாக பணிபுரிவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள், அதிக பணி செய்பவர்களாகவும், இலக்கில் பயணிப்பவர்களாகவும், இவர்கள் ஒழுக்கமாக பணி செய்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை சுற்றியுள்ள மற்றவர்களையும் கவர்வார்கள். இவர்கள் சிறந்த குழு தலைவர்களாகவும் இருப்பார்கள்.

கன்னி

இவர்கள் எதையும் விளக்கி கூறும் நபர்களாக இருப்பார்கள். இந்த திறமை, இவர்கள் ஏதேனும் விளக்கிக்கூறும் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள உதவும். இவர்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பிரச்னைகளை வளரவிடமாட்டார்கள். இவர்கள் செய்யும் பணிகள், ப்ராஜெக்ட்கள் துல்லியமாக இருக்கும்.

கடகம்

எமோஷனல் இன்டலிஜன்ட்களான இவர்கள், அதேபோல் பணியிடத்திலும் நடந்துகொள்வார்கள். இவர்கள் அனுதாபம்மிக்கவர்களாக பணியிடத்தில் நடந்துகொள்வார்கள். இவர்களுடன் பணிபுரிபவர்களுக்கு துணையாக இருப்பார்கள். இவர்கள் குழுவில் ஒரு நல்ல சூழலை உருவாக்குவார்கள். இவர்கள் மற்றவர்களுடன் சேர்த்து பணிபுரிவது, மற்ற குழுவினருடனும் இணக்கமான சூழலை உருவாக்கவும், குழுவுக்குள் நல்ல சூழல் உருவாகவும் உதவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள், இவர்கள் கடுமையான பணி அறத்தை கடைபிடிப்பார்கள். இவர்களின் அணுகுமுறையும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எவ்வளவு கடுமையாக பணி கொடுத்தாலும், இவர்கள் அதை முயன்று செய்து முடித்து, அதிலும் சிறப்பான பணியாக அதை ஒப்படைப்பார்கள். இவர்கள் ஒரு நிலையாக பணிச்சூழலை உருவாக்குவார்கள். இது அவர்களை ஒரு சிறந்த உடன் பணிபுரியும் நபராக்கும்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.