தமிழ் செய்திகள்  /  Astrology  /  Benifits Of Of Circumventing Arasamaram On Saturday Horoscope Astrology

Horoscope Luck: அகால மரண பயம்.. பயமுறுத்தும் சனிபகவான்.. தப்பிக்க செய்ய வேண்டிய உடனடி பரிகாரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2024 08:27 PM IST

விருச்சிக சாஸ்திரத்தில் அரச மரத்தை மிக மிக உன்னத மரமாக சொல்லி இருக்கிறார்கள். சனி பிடித்தால் மட்டுமே ஒரு மனிதனுக்கு நல்லது நடக்கும். காரணம், அந்த ஏழரை சனியில் தான் நீங்கள் நன்றாக பக்குவப்படுவீர்கள்.

ஜாதகம்!
ஜாதகம்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “கிரக தோஷம், மனிதர்கள் தோஷம், கண் திருஷ்டி, அகால மரண பயம், ஜாதகத்தில் ஏதாவது கண்டங்கள் இருப்பது, நோய்வாய்ப்பட்டு இருப்பது இவை எல்லாவற்றையும் தீர்க்கக் கூடிய ஒரே மரம் அரச மரம்.

விருச்சிக சாஸ்திரத்தில் அரச மரத்தை மிக மிக உன்னத மரமாக சொல்லி இருக்கிறார்கள். சனி பிடித்தால் மட்டுமே ஒரு மனிதனுக்கு நல்லது நடக்கும். காரணம், அந்த ஏழரை சனியில் தான் நீங்கள் நன்றாக பக்குவப்படுவீர்கள். 

சனிபகவான் கொடுப்பாரையும் தடுக்க முடியாது; கெடுப்பாரையும் தடுக்க முடியாது என்று சொல்வார்கள். இப்படி இருக்கும் பொழுது, நீங்கள் அரச மரத்தை கெட்டியாக பற்றி கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு பாசிட்டிவான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சனிக்கிழமை சரியாக 8 மணிக்கு அரச மரத்தை 108 முறை சுற்றுங்கள். அப்படி முடியவில்லை என்றால் 27 முறை சுற்றுங்கள். உடல்நல குறைவு, வயது முதிர்வு இருப்பின் 9 முறையாவது நீங்கள் அரச மரத்தை சுற்ற வேண்டும். 

அதனை தொடர்ந்து, அரச மரத்தின் முன்னால் நின்று வான் வலியை அண்ணாந்து பார்த்து, என்னை பிடித்த சனி எல்லாம் நல்லவையாக மாறுவதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் என்று மனம் உருகி வேண்டுங்கள். இதை நீங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு புதிய யோசனைகள் பிறக்கும். உங்களுக்கு உதவுவதற்கு ஆட்கள் வந்து நிற்பார்கள். ஏழரை சனியில் நீங்கள் வாங்கும் அடியானது குறையும்” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்