Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.

Kamika Ekadasi: இந்து மக்கள் ஏகாதசி தினத்தில் பெருமாளை வழிபடுகின்றனர். காமிகா ஏகாதசி ஆனது, சவான் மாதம் என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தின் கிருஷ்ண பட்சத்தின் ஏகாதசி திதியில் நிகழ்கிறது. அதன்படி, இந்த காமிகா ஏகாதசியானது வரும் ஜூலை 31ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
காமிகா ஏகாதசி நாளின் முக்கியத்துவம்:
இந்த ஆண்டு காமிகா ஏகாதசி விரதம் ஜூலை 31அன்று அனுசரிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசி விரத நாளில், முதலில் ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், காமிகா ஏகாதசியின் கதையை இந்த நாளில் படிப்பர். இந்த கதையைக் கேட்பதன் மூலம் புண்ணிய பலன் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவதன் மூலம் கிடைக்கும் புண்ணியம், காமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதன் மூலமும், காமிகா ஏகாதசி பற்றிய புராண கதையைக் கேட்பதன் மூலமும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
காமிகா ஏகாதசி விரதத்தின் கதை:
ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில் ஒரு சத்திரியர் வாழ்ந்து வந்தார். அவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுபவர். குறிப்பாக அவர் தனது சக்தி மற்றும் வலிமையைப் பற்றி பெருமிதம் கொண்டு இருப்பார். அந்த சத்திரியர் கடவுளை மிகவும் நம்பினார். ஆனால் அவர் இதயத்தில் ஆணவம் இருந்தது. இருந்தாலும், அவர் ஒவ்வொரு நாளும் விஷ்ணுவை வணங்குவதில் ஆர்வத்துடன் இருப்பார்.