Budhwa Mangal: வருகிறது புத்வா மங்கள்.. அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அனுமனுக்குப் பிடித்த ராசிகள்!
Budhwa Mangal: புத்வா மங்களில் அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அனுமனுக்குப் பிடித்த ராசிகள் குறித்துக் காண்போம்.

Budhwa Mangal: இந்து நாட்காட்டியின்படி, மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜேஷ்டா மாதம் தொடங்குகிறது. ஜேஷ்டா மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது. இது ஆஞ்சநேயருக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
Mar 14, 2025 05:08 PMமீனத்தில் உருவாகும் புதன் - சுக்கிரன் சேர்க்கை.. நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள்
Mar 14, 2025 03:13 PMமீன ராசியில் சூரிய பகவான்.. இந்த ராசிகளுக்கு அடிக்க போகுது லக்.. வருமானம் அதிகரிக்கும்.. தொழிலில் நல்ல லாபம் கிட்டும்!
புத்வா மங்களின் முதல் செவ்வாய்க்கிழமை மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் மே 28ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 2:05 மணிவரை நீடிக்கும்.
இந்த காலத்தில் ‘பிரம்ம யோகம்’ உண்டாகிறது. அப்போது சந்தோஷம் சார்ந்த நிகழ்வுகள் உண்டாகும்.
நீங்கள் ஒரு புதிய தொழிலை செய்யத் தொடங்க நினைத்தால், புத்வா மங்களில் செய்யலாம். நன்கொடைகள் மற்றும் சுப காரியங்கள் செய்யப்படுகின்றன.
புத்வா மங்களுக்குப் பின் இருக்கும் வரலாறு என்ன?
அனுமனின் ஆசியைப் பெற விரும்பினால், ’புத்வா மங்கள்’ நாளில், அனுமனின் ஆலயம் சென்று, பிரசாதம் வழங்க வேண்டும். ஆலமர இலை கொண்டு அனுமனுக்கு அர்ச்சனை செய்வது, அந்த இலையை நதியில் மிதக்கச் செய்வது பல பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
புத்வா மங்களில் எப்படி பூஜை செய்வது?
‘புத்வா மங்கள்’நாளில், காலையில் எழுந்து, நீராடிவிட்டு, வீட்டின் பூஜையறையை சுத்தம்செய்து, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளவேண்டும். அனுமன் படத்துக்கு முன் நெய்தீபம் ஏற்றி, அனுமன் மந்திரங்களை பாராயாணம் செய்யவேண்டும்.
இந்த பூஜையின் போது வெண்மை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. யாரையும் அவமதிக்கக் கூடாது. கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
அனுமனுக்கு இஷ்டமான ராசிகள்:
அனைத்து 12 ராசிகளிலும் சில ராசியினருக்கு அனுமனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
மேஷம்: மேஷ ராசியினரை அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். மேஷ ராசியினர் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது, அனுமனை வழிபட்டால் சிக்கல்கள் பஞ்சாக பறந்துவிடும்.
பணப்பிரச்னை, மனச்சோர்வு, அறிவுச்சோர்வு ஆகியவை இருந்தால், மேஷ ராசியினர் அனுமனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.
சிம்மம்: இந்த ராசியினருக்கு குடும்பத்தில் சிக்கல் எழுந்தால், தூய மனதுடன் அனுமனை வழிபட்டால் உடனடியாகப் பிரச்னைகள் அகலும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழாது.
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு அனுமனின் ஆசியால், கடினமான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அனுமன் வழிபாடு பல நல்ல பலன்களை விருச்சிக ராசியினருக்குத் தரும்.
கும்பம்: கும்ப ராசியினருக்கு அனுமனின் ஆசியுண்டு. கும்ப ராசியினர், செவ்வாய்க்கிழமை அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள் நீங்கும். தாமதம் விலகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

டாபிக்ஸ்