தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vasumati Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பணத்தை அள்ளி தரும் வசுமதி யோகம் எந்த ராசிக்கு? இதோ முழு விவரம்

Vasumati Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பணத்தை அள்ளி தரும் வசுமதி யோகம் எந்த ராசிக்கு? இதோ முழு விவரம்

Kathiravan V HT Tamil
Jun 08, 2024 05:38 PM IST

Vasumati Yogam: சாதாரண குடும்பத்தில் பிறந்து, எந்தவித பின்னணி இல்லாத சூழ்நிலையிலும், சுய முயற்சி, உழைப்பு, அறிவாற்றல் மூலம் ஒரு மனிதன் அனைத்து விதமான செல்வங்களை பெறுவதுதான் இந்த வசுமதி யோகத்தின் சிறப்பாக விளங்குகிறது.

Vasmati Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பணத்தை அள்ளி தரும் வசுமதி யோகம் எந்த ராசிக்கு? இதோ முழு விவரம்
Vasmati Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ பணத்தை அள்ளி தரும் வசுமதி யோகம் எந்த ராசிக்கு? இதோ முழு விவரம்

யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து, அதன் பலன்கள் மாறுபடும். ஒருவரின் ஜாதகத்தில் பல யோகங்கள் அமைந்திருந்தால், அது அந்த நபருக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும்.

வசுமதி யோகம் எப்படி உண்டாகிறது?

உபஜெய ஸ்தானங்கள் என சொல்லப்பட கூடிய 3, 6, 10, 11ஆம் வீடுகளில் இயற்கை சுபர்கள் அமர்ந்து அவர்களில் யாரேனும் ஒருவரோ, இருவரோ அல்லது மூவரோ ஆட்சி அல்லது உச்சம் பெற்ற நிலையில் இருந்தால்  வசுமதி யோகம் உண்டாகும். 

மேலும், ராசிக்கு 3, 6, 10, 11ஆம் இடங்களில் ஏதேனும் மூன்று இடங்களில் இயற்கை சுபர்கள் அமர்ந்து, அதில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ ஆட்சி, உச்சம் பெறும் போது வசுமதி யோகம் உண்டாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

வசுமதி யோகத்தின் பலன்கள்

சாதாரண  குடும்பத்தில் பிறந்து, எந்தவித பின்னணி இல்லாத சூழ்நிலையிலும், சுய முயற்சி, உழைப்பு, அறிவாற்றல் மூலம் ஒரு மனிதன் அனைத்து விதமான செல்வங்களை பெறுவதுதான் இந்த வசுமதி யோகத்தின் சிறப்பாக விளங்குகிறது. 

இந்த யோகம் கொண்டவர்கள் தங்கள் விடா முயற்சியால் வெற்றிகளை குவிப்பார்கள், அதிகாரம் மிக்கவர்கள் உடன் தொடர்பு, அரசுக்கு நிகரான பதவி வகித்தல், அரசால் மதிக்கப்படுதல், செல்வந்தர்களாக விளங்குதல், தலைமை பொறுப்புகளை வகித்தல், வழிகாட்டியாகவும், பலருக்கு உதவி செய்பவராகவும் இந்த யோகம் கொண்டவர்கள் விளங்குவார்கள். 

செல்வம் மற்றும் செல்வாக்கு: 

வசுமதி யோகம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாளில் செல்வம் மற்றும் செல்வாக்கை பெறுவார்கள். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி: 

தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி பெறுவார்கள். 

சிறந்த கல்வி: 

வசுமதி யோகம் மூலம் ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.அறிவுத் திறமை, புத்திசாலித் தனம் மூலம் செல்வத்தை சேர்ப்பார்.  

சந்தோஷமான திருமண வாழ்க்கை:

வசுமதி யோகம் பெற்றவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக அமையும். இவர்களுக்கு சமூக மதிப்பு, நல்ல நண்பர்கள், வாகன வசதி, சொந்த வீடு போன்ற வசதிகள் அமையும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel