Suriyan Ketu conjunction: மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் கேது! கெடுப்பாரா! கொடுப்பாரா? முழு விவரம் இதோ!
சம்பாத்யகாரகன் சூரியன் உடன் கேது சேர்ந்து இருந்தால், சம்பாதிப்பதில் ஜாதகருகு அதிக ஆர்வம் இருக்காது. தத்துவம், ஆன்மீகம், மந்திர உபதேசம், தெய்வ வழிபாடு, மாற்று மருத்துவம், சித்த மருத்துவம் போன்றவற்றில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

நவகிரகங்களில் மிகுந்த சக்தி வாய்ந்த கிரகமான கேது தன்னுடன் சேரும் கிரங்களின் காரகத்துவம், ஆதிபத்தியங்களை நீர்த்து போக செய்பவர் ஆவார்.
சூரியன் கேது சேர்க்கை
5 டிகிரிக்குள் சூரியன் கேது உடன் இணைவதை மட்டும்தான் இணைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தாண்டி, ஒரே வீட்டில் இரண்டு கிரங்கள் சேர்ந்து இருந்தால் அது இணைவு கிடையாது. சக்தி வாய்ந்த கிரகம் ஆன கேது ஒரே டிகிரியில் சூரியன் உடன் இருக்கும் போது கிரகன தோஷம் அடைவார்.
சூரியன்
அப்பா, ஆத்மா, சம்பாத்ய வலிமை, அதிகார பதவிகள், அரசாங்க வேலை, அரசியல், மின்சாரம், மின்சாதனம் உள்ளிட்டவை சூரியனின் காரகத்துவத்தை பெற்றது.
ஜோதிட விதிப்படி கேது உடன் சேரும் கிரகம் தனது வலிமையை இழக்கும் என்பது ஜோதிட விதியாகும். சம்பாத்யகாரகன் சூரியன் உடன் கேது சேர்ந்து இருந்தால், சம்பாதிப்பதில் ஜாதகருகு அதிக ஆர்வம் இருக்காது. தத்துவம், ஆன்மீகம், மந்திர உபதேசம், தெய்வ வழிபாடு, மாற்று மருத்துவம், சித்த மருத்துவம் போன்றவற்றில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.
12 லக்னத்திற்குமான சூரியன் - கேது சேர்க்கை
மேஷம் லக்னக்காரர்களுக்கு பூர்வீகம் பாதிப்பு, தந்தை - மகன் உறவு பாதிப்பு, குழந்தை பிறப்பதில் சிக்கல், பூர்வீக சொத்துகளை அனுபவிப்பதில் சிக்கல், காதல் தோல்வி, பங்குச்சந்தையில் இழப்பு ஆகியவை சூரியன் - கேது சேர்க்கை மூலம் ஏற்படும்.
ரிஷபம் லக்னக்காரர்களுக்கு தாயார் உடல் நிலை பாதிப்பு, தன் சுகம் பாதிப்பு, வீடு, வாகனம், வசதி வாய்ப்புகளில் ஆர்வம் இன்மை உள்ளிட்ட தன்மைகள் உண்டாகும்.
மிதுனம் லக்னக்காரர்களுக்கு தைரிய வீரிய செயல்திறன் குறைந்தல், சகோதர்கள் உடன் பிரச்னை, ஒப்பந்தங்களால் பாதிப்பு ஏற்படும்.
கடகம் லக்னக்காரர்களுக்கு சம்பாதிப்பதில் இடைஞ்சல், திருமண வாழ்கையில் பிரச்னை, பேச்சில் தடுமாற்றம் உள்ளிட்டவை உண்டாகும்.
சிம்மம் லக்னக்காரர்களுக்கு சுய முயற்சி குன்றுதல், துறவறத்தில் ஆர்வம் உள்ளிட்டவை இருக்கும்.
கன்னி லக்னக்காரர்களுக்கு தூக்கம் கெடுதல், வெளிநாடுகளில் தனித்து வாழ்தல், சிறைபடுதல் உள்ளிட்ட சிக்கல்கள் உண்டாகும்.
துலாம் லக்னக்காரர்களுக்கு லாபம் இல்லாமை, மூத்த சகோதர உறவுகளுடன் பாதிப்பு, அரசுடன் மோதல் உள்ளிட்டவை உண்டாகும்.
விருச்சிகம் லக்னக்காரர்களுக்கு அரசு வேலை இழப்பு, உத்யோகத்தில் சிக்கல், ஆன்மீக ஈடுபாடு உள்ளிட்டவை உண்டாகும்.
தனுசு லக்னக்காரர்களுக்கு தந்தை - மகன் உறவு பாதிப்பு, குடும்ப பொறுப்புகளை சுமப்பது, தியாகம் செய்வது உள்ளிட்ட நிலை உண்டாகும்.
மகரம் லக்னக்காரர்களுக்கு ரகசிய தொடர்புகள், ஆயுள் பற்றிய பயம், வெளிநாட்டில் தனித்து வாழ்தல், குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தல், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளிட்டவை ஏற்படும்.
கும்பம் லக்னக்காரர்களுக்கு வாழ்கைதுணையால் பாதிப்பு, திருமண வாழ்கையில் நாட்டம் இன்மை உள்ளிட்டவை உண்டாகும்.
மீனம் லக்னக்காரர்களுக்கு
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
