Tamil News  /  Astrology  /  Benefits Of Saraswati Yogam Due To Combination Of Three Planets

Saraswati Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!' வாழ்கையை புரட்டி போடும் சரஸ்வதி யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Jan 27, 2024 09:47 AM IST

“Saraswati Yogam: சிறந்த எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சு மற்றும் எழுத்து திறன் கவிதை நயம் மிக்கதாகவும், வெகுஜனங்களை கவர்ந்திழுக்க கூடியதாகவும் இருக்கும்”

சரஸ்வதி யோகம்
சரஸ்வதி யோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் 12 வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் “புதன், குரு, சுக்கிரன்” ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இருந்தால் அந்த ஜாதகருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதியின் அருளாற்றல் நிறைந்த “சரஸ்வதி யோகம்” ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 

சரஸ்வதி யோகத்தில் தொடர்புடைய புதன் கிரமானது ‘அறிவின் கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கற்றல், பேச்சு, எழுத்து மற்றும் தர்க்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

குரு பகவான் ஞானத்தின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆன்மீகம், தர்மம் மற்றும் தெய்வீக அறிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

சுக்கிரன் கிரமானது அழகு, கலை மற்றும் இன்பத்தின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இது கலை, இசை, நடனம் மற்றும் பிற கலை வடிவங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

அதேபோல் குரு, புதன் இதில் ஏதாவது ஒருவர் இரண்டாம் இடத்தில் இருந்தால் ஞானத்தாலே அனைத்தையும் அறியும் திறன் கிடைக்கும் இதுவும் சரஸ்வதி யோகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

இந்த சரஸ்வதி யோகம் கொண்ட நபர்கள் மிக இளம் வயதிலிருந்தே பல விதமான கல்வி மற்றும் கலைகளை ஆர்வமுடன் பயில்வார்கள் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற இங்கிதங்கள் தெரிந்தவர்களாக இந்த சரஸ்வதி யோகம் கொண்டவர்கள் இருப்பார்கள்.

மேலும் ஓவியம், சிற்பம், இசை போன்ற ஆயக் கலைகளில் சிறந்த திறமையாளர்களாக இந்த சரஸ்வதி யோகம் கொண்டவர்கள் விளங்குவார்கள்.

ஒரு சிலர் திரைப்படம், நாடகம், இசையமைப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு மக்களின் மிகுந்த அபிமானத்தையும், பெருமளவில் செல்வத்தையும் ஈட்டுவார்கள்.

சரஸ்வதி யோகம் கொண்டவர்கள் பல்வேறு துறைகளிலும் வெற்றிபெற முடியும். அவர்கள் அரசியல், கல்வி, வணிகம், அறிவியல் மற்றும் கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் நல்ல பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்கள் சொந்த கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்த முடியும். 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்