Sakata Yogam: மேஷம் முதல் மீனம் வரை! வாழ்கையை சுற்றி விடும் சகட யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Sakata Yogam: சகடை என்பதற்கு சக்கரம் என்று பொருள். சக்கரம் ஒரே இடத்தில் நின்றால், இயங்கவில்லை என்று பொருள், சக்கரம் இயங்கும்போது, மேல் உள்ளது கீழ் செல்வதும், கீழ் செல்பவர்கள் மேல் செல்வதுதான் இந்த சகடை யோகம் தரும் பலன் ஆகும் .
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.
சகடை யோகம் என்றால் என்ன?
சகடை என்பதற்கு சக்கரம் என்று பொருள். சக்கரம் ஒரே இடத்தில் நின்றால், இயங்கவில்லை என்று பொருள், சக்கரம் இயங்கும்போது, மேல் உள்ளது கீழ் செல்வதும், கீழ் செல்பவர்கள் மேல் செல்வதுதான் இந்த சகடை யோகம் தரும் பலன் ஆகும் .
இந்த யோகம் பெற்றவர்கள் திடீரென உச்சம் தொட்டு, மீண்டும் சதாரண நிலையை அடைய வேண்டி வரும். இது ஜாதகரின் தொழில் வாழ்கை மற்றும் திருமண வாழ்கையிலும் தாக்கம் செலுத்தும்.
சகடை யோகத்தை எப்படி கணிக்க வேண்டும்
தனகாரகன் ஆன குரு பகவானுக்கு 6, 8, 12ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு சகடை யோகம் உண்டாகும். ஆனால் சந்திரனுக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் குரு என்று கணிக்க கூடாது.
லக்ன வாரியாக சகடை யோகம் உண்டாக்கும் தாக்கம்
உதாரணமாக குரு பகவான் மீனம் ராசியில் உள்ளார் என எடுத்துக் கொள்வோம். அப்போது 6ஆம் இடமான சிம்மம், 8ஆம் இடமான துலாம், 12ஆம் இடமான கும்பம் ராசிகளில் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படுகின்றது.
இதில் 12ஆம் இடம் சற்று விதிவிலக்காக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சந்திரன் 12ஆம் இடத்தில் இருக்கும் போது, 2ஆம் இடமான தன ஸ்தானத்தில் குரு இருப்பார் என்பதால் பெரிய எதிர்மறை விளைவுகள் ஏற்படாது. சகட யோகத்தில் பல நிலைகள் உள்ளது. அதில் யோகம் தரக்கூடிய சகட யோகமும் உண்டு.
உதாரணமாக தனுசு ராசியில் குரு பகவான் ஆட்சி பெற்று இருக்க, ரிஷபம் ராசியில் சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், சகட யோகம் ஏற்பட்டாலும், ஜாதகருக்கு பெரும் பொருளையும், வெற்றியையும் ஏற்படுத்தி தரும்.
மேலும் சகட யோகத்தை கணிக்கும்போது, சந்திரனின் வலிமையையும் கணிக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக சகட யோகம் ஆனது அருள் அணியை சேராத லக்னத்திற்கு பெரிய பாதிப்புகளை கொடுக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்திற்கு சகட யோகம் ஏற்பட்டால், பிரச்னைகளை அதிகமாக சந்திக்க வேண்டி வரும். இவர்களுக்கு வாழ்கை சீரற்ற நிலையில் இருக்கும். இருப்பினும் சந்திரன் வளர்பிறை மற்றும் தேய்பிறையாக உள்ள நிலையை பொறுத்து பலன்கள் மற்றும் பாதிப்புகள் மாறுபடும். கும்ப லக்னத்தில் கும்பம் ராசியில் குரு இருந்து 6ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால், கடும் சகட யோகத்தை உண்டாக்கும்.
குருவுக்கு சந்திரன் இயற்கையான மித்திரன் ஆவார். சந்திரன் நின்ற இடம்தான் ராசியாக கணக்கிடப்படுகின்றது.
அருள் அணி ராசிகளை பொறுத்தவரை மேஷ லக்னத்தில் சந்திரன் கன்னி, விருச்சிகம் ராசியில் இருக்கும்போது சகட யோகம் உண்டாகும், நிச்சயம் பாதிப்புகள் இருக்கவே செய்யும்.
கடக லக்னத்தில், குரு உச்சம் பெற்று சந்திரன் தனுசு அல்லது கும்பத்தில் இருக்கும்போது சகட யோகம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9