Ratinanjari Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜாவாக வாழ வைக்கும் ரத்தினாஞ்சரி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Ratinanjari Yogam: திடீர் அதிர்ஷ்டம், உழைக்காமல் பணம் கிடைத்தல், புதையல் கிடைத்தல், அனாமத்து சொத்துகள், பங்குச்சந்தை மூலம் ஆதாயம், எதிர்பாரா திருப்பங்கள் மூலம் பொருள் வரவு, பிறரின் பணம் வந்து சேர்வது, சிரத்தைகளை மேற்கொள்ளாமல் செல்வம் சேர்ப்பது உள்ளிட்ட பலன்களை இந்த யோகம் உண்டாக்கும்.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.
ரத்தினாஞ்சரி யோகம்
ஜோதிடத்தில் திடீர் அதிர்ஷ்டங்களை தரக்கூடிய யோகங்களில் ஒன்றாக ரத்தினாஞ்சரி யோகம் விளங்குகின்றது. ஒருவரது ஜாதகத்தில் 1, 4, 7, 10 ஆகிய இடங்களை குறிக்கும் கேந்திரங்கள் எப்போதும் வலிமை பெற்றவை ஆகும். இதில், ஒன்றாம் இடம் என்பது திரிகோணத்திற்கும், கேந்திரத்திற்கும் சம்பந்தம் பெறுவதால் பொதுவில் வைக்கப்படுகின்றது. மீதி உள்ள 4, 7, 10ஆம் அதிபதிகளில் யாராவது ஒரு கிரகம் 9ஆம் அதிபதி உடன் பரிவர்தனை பெற்று இருந்தால் ரத்தினாஞ்சரி யோகம் உண்டாகின்றது.
உதாரணமாக, சிம்ம லக்னத்தை எடுத்துக் கொள்வோம். சிம்ம லக்னத்தின் 4ஆம் அதிபதியாக செவ்வாய் பகவானும், 7ஆம் அதிபதியாக சனி பகவானும், 10ஆம் அதிபதியாக சுக்கிரனும் உள்ளனர். இதில் 9ஆம் அதிபதியாகவும் செவ்வாய் பகவான் உள்ளார் என்பதால் இந்த பரிவர்தனை ரத்தினாஞ்சரி யோகத்தை கொடுக்காது. ஆனால் 10ஆம் அதிபதியான சுக்கிரனும், 9ஆம் அதிபதியான செவ்வாயும் பரிவர்தனை பெற்றால் ரத்தினாஞ்சரி யோகம் கிடைக்கும்.
ரத்தினாஞ்சரி யோக பலன்கள்
திடீர் அதிர்ஷ்டம், உழைக்காமல் பணம் கிடைத்தல், புதையல் கிடைத்தல், அனாமத்து சொத்துகள், பங்குச்சந்தை மூலம் ஆதாயம், எதிர்பாரா திருப்பங்கள் மூலம் பொருள் வரவு, பிறரின் பணம் வந்து சேர்வது, சிரத்தைகளை மேற்கொள்ளாமல் செல்வம் சேர்ப்பது உள்ளிட்ட பலன்களை இந்த யோகம் உண்டாக்கும்.
வாழ்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும்
இந்த யோகம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், நற்பெயர், மற்றும் நல வாழ்வை வழங்கக்கூடியது என்பதை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி, சமூகத்தில் உயர் நிலை, அதிக செல்வம், நற்பெயர், மற்றும் மானியங்களை பெற இந்த யோகம் காரணமாக அமைகின்றது.
ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால், 9, 10 ஆம் அதிபதிகள் சனி என்பதால், 10ஆம் இடம் பரிவர்தனை என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. 4ஆம் அதிபதி சூரியனும், 9ஆம் அதிபதி சனியும் பரிவர்தனை ஆனால் இந்த யோகம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9