Raja Lakshana Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜ லக்ஷன யோகம் யாருக்கு?
”இந்த கிரகங்கள் இணைந்த நிலையில் இருந்தாலும், தனித்தனியாக இருந்தாலும் ராஜ லக்ஷண யோகம் பொருந்தக்கூடியது”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்ற பொருள் ஆகும். ராஜ லக்ஷண யோகத்தை பொறுத்தவரை உங்கள் ஜாதகத்தில் இயற்கை சுபர்கள் என்று சொல்லக்கூடிய சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் லக்ன கேந்திரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தால் போதுமானது. இந்த கிரகங்கள் இணைந்த நிலையில் இருந்தாலும், தனித்தனியாக இருந்தாலும் ராஜ லக்ஷண யோகம் பொருந்தக்கூடியது.
இயற்கையின் சுவர்களான குரு, சுக்ரன், சந்திரன் மற்றும் புதன். இந்த நான்கு கிரகங்களும் இயற்கையில் நன்மை தருபவை. குரு முழுமையான சுவர், சுக்ரன் முக்கால், சந்திரன் அரை, புதன் கால் பகுதி சுவர் ஆவார்கள். இந்த நான்கு சுவர்களும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமையும் போது ராஜ லக்ஷன யோகம் ஏற்படுகிறது.
லக்ன ரீதியாகவோ அல்லது ராசி ரீதியாக இந்த யோகம் ஏற்பட வேண்டும், மூன்றாவது நிலையில் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும். அப்போது தான் ராஜ லக்ஷன யோகம் தரும்.
ராஜ லக்ஷண யோகம் உடைய ஜாதகருக்கு பிறக்கும் போதே நல்ல அம்சம் உள்ள குடும்பத்தில் பிறக்க வைத்து வளர்ச்சியை கொடுக்க கூடியது.
நல்லத் தோற்றப்பொலிவையும், அசையும் அசையா சொத்துக்கள், திடகாத்திரமான உடல் அமைப்பு, நீண்ட ஆயுள் ஆகிய நன்மைகளை இந்த யோகம் ஜாதகருக்கு தரவல்லது.
இந்த யோகம் பெற்றவர்கள் பயம் கலந்த மரியாதையை பிறரிடம் இருந்து பெறுவர். அரசாங்கத்தில் உயர் பதவி, அதிகாரம், புகழ், செல்வம், செழிப்பு, நல்ல கல்வி, ஞானம், பிள்ளைகள் வழியில் நன்மைகள், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, சமூகத்தில் மதிப்பு ஆகியவை கிடைக்கும்.
அதிகாரம் படைத்தவர்களின் தொடர்புகளை நமக்கு தரும், அல்லது உங்களை அதிகாரம் படைத்தவராக மாற்றும். அரசு, அதிகாரம், பதவி, அந்தஸ்து, புகழ், மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்தி தரும்.
டாபிக்ஸ்