Pushkara Navamsa Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சக்ரவர்த்தியாய் ஆள வைக்கும் புஷ்கர நவாம்ச யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pushkara Navamsa Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சக்ரவர்த்தியாய் ஆள வைக்கும் புஷ்கர நவாம்ச யோகம் யாருக்கு?

Pushkara Navamsa Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சக்ரவர்த்தியாய் ஆள வைக்கும் புஷ்கர நவாம்ச யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Published Apr 20, 2024 12:32 PM IST

”ஒரு ராசிக்கட்டத்தின் அடிப்படையில் கிரகங்கள் நீசம், பகை, யுத்தம், அஸ்தமனம், வக்ரம் என எதுவாக இருந்தாலும், புஷ்கர நவாம்ச வலிமையை கிரகம் பெறும்போது அந்த கிரகத்தின் தசாபுத்தி உங்களுக்கு நிச்சயம் ராஜயோகத்தை செய்கிறது”

புஷ்கர நவாம்ச யோகம்
புஷ்கர நவாம்ச யோகம்

இது போன்ற போட்டோக்கள்

புஷ்கரநாவம்ச யோகம் என்பது நவாம்ச கட்டத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. இது நட்சத்திரங்களின் சார பலத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. 

9 கிரகங்களுக்கும் தலா 3 நட்சத்திரங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. 27 நட்சத்திரங்களில் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில்  கிரகங்கள் அமையும் போது நவம்சத்தில் பெறும் வலிமையே புஷ்கர நவாம்ச யோகம் எனப்படுகிறது. 

ஒரு ராசிக்கட்டத்தின் அடிப்படையில் கிரகங்கள் நீசம், பகை, யுத்தம், அஸ்தமனம், வக்ரம் என எதுவாக இருந்தாலும், புஷ்கர நவாம்ச வலிமையை கிரகம் பெறும்போது அந்த கிரகத்தின் தசாபுத்தி உங்களுக்கு நிச்சயம் ராஜயோகத்தை செய்கிறது. 

9 நவகிரகங்களில் கேது, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களுக்கு புஷ்கர நவாம்சத்தில் இடம் இல்லை என்பதால் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலம், செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இதில் இடம்பெறாது. 

குறிப்பாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புஷ்கர நவாம்ச யோக இருக்காது என்பது அர்த்தம் இல்லை, இந்த நட்சத்திரங்கள் புஷ்கர நவாம்ச யோகத்தில் இடம்பெறாது. 

அதே போல் மீதம் உள்ள 6 கிரகங்களின் நட்சத்திரங்களில் அனைத்து பாதங்களும் இதில் இடம் பெறாது. அதாவது 108 பாதங்களில் 24 நட்சத்திர பாதங்கள் மட்டுமே புஷ்கர நவாம்சத்தில் இடம்பெறும்.

இந்த 24 நட்சத்திர பாதங்களில் ராசியில் உள்ள ஏதேனும் ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களோ நிற்க பிறப்பு எடுப்பவர்கள் இந்த யோகத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவார்.

சூரியன்  நட்சத்திரமான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களின் ஒன்றாம் பாதமும், 4ஆம் பாதமும் புஷ்கர நவாம்சத்தில் இடம் பெறும். 

சந்திரன் மற்றும் சனியின் நட்சத்திரங்களின் 2ஆம் பாதங்கள் மட்டும் புஷ்கர நவாம்சத்தில் இடம்பெறும். இதன்படி ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களின் 2ஆம் பாதத்தில் ஒரு கிரகம் நின்றால் அது புஷ்கர நவாம்சத்தில் இடம்பெறும். 

ராகுவின் நட்சத்திரத்தின் 4ஆம் பாதம் மட்டும் புஷ்கர நவாம்சத்தில் இடம்பெறும், இதன்படி திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களின் 4ஆம் பாதங்கள் புஷ்கர நவாம்சம் பெறும். 

குருவின் நட்சத்திரம் ஆன புனர்பூசம், விசாகம், பூராட்டாதி நட்சத்திரங்களின் 2 மற்றும் 4ஆம் பாதங்கள் புஷ்கர நவாம்சத்தில் இடம்பெறும். 

சனியின் நட்சத்திரம் ஆன பூசம், அனுசம், உத்தரட்டாதி நட்சத்திரங்களின் 2ஆம் பாதங்கள் புஷ்கரநவாம்சத்தில் இடம்பெறும். 

சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒரு கிரகம் நின்றால் புஷ்கர நவம்சத்தில் இடம் பெறும். 

புதன் நட்சத்திரங்களான கேட்டை, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்கள் புஷ்கர நவாம்சத்தில் இடம் பெறாது. 

இந்த அமைப்பை பெற்றவர்கள் வாழ்கையில், அனைத்து சந்தோஷங்களையும், தொழில் மேன்மைகளையும், முதலாளித்துவத்தையும், அதிஷ்ட வாய்ப்புகளையும் அந்த திசையில் அமைய பெறுவார்கள். 

இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன் வீடுகள்தான் புஷ்கர நவாம்சத்தில் இடம் பெறுகின்றன என்பதால் மீனம், தனுசு, ரிஷபம், துலாம், கடகம், கன்னி  ஆகிய ராசிகள் இதில் இடம் பெறுகின்றன. 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner