தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Bhagawan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் உடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்!

Chevvai Bhagawan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் உடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 28, 2024 04:30 PM IST

Chevvai in astrology: நெருப்பு கிரகமான செவ்வாய், சகோதர்கள், தொழில், வேலை, பூமி, வீரம், ரத்தம், போர் ஆகியவற்றிக்கு காரகன் ஆவார்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் உடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்!
’மேஷம் முதல் மீனம் வரை!’ செவ்வாய் உடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்!

செவ்வாய்-சூரியன் சேர்க்கை 

செவ்வாய் உடன் சூரியன் இணைந்து இருதால் இரு நெருப்பு கிரகங்கள் இணைவதால், இந்த இணைவு ஏற்படும் பாவம் பாதிப்புக்குள்ளாகும். இந்த இணைவு 2இல் இருந்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும், 3இல் இருந்தால் உறவுகளுடன் பிரச்னை, 4இல் இருந்தால் உணவு உண்ணும் போது பிரச்னை, 5இல் இருந்தால் பிள்ளைகளுடன் தகராறு, 6இல் இருந்தால் விரோதிகளுடன் தகராறு, 7இல் இருதால் வாழ்கை துணை உடன் பிரச்னை ஆகியவை உண்டகும்.  ஆனால் சூரியனுக்கு 10 டிகிரிக்குள் செவ்வாய் இணைந்தால் எந்த பிரச்னைகளும் ஏற்படாது. 

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை  

செவ்வாய் உடன் சந்திரன் இணையும் போது சந்திர மங்கள யோகம் ஏற்படும். இதனால் பூமி மூலமாக சந்தோஷங்கள் ஏற்படும். சகோதரர்கள், உத்யோகம், தொழில்கள் மூலம் சந்தோஷங்கள் ஏற்படும். உடல் பலம் பெரும். 

செவ்வாய்-புதன் சேர்க்கை 

செவ்வாய் உடன் புதன் இணைந்தால், கல்விகாரகனான புதனும், உத்யோககாரகன் ஆன செவ்வாயும் இணைந்தால் படிக்கும் போதே வேலை கிடைக்கும் நிலை உண்டாகும். இதனால் சிலருக்கு படிப்பு தடைப்படலாம். சிலர் விளையாட்டுக்களில் சிறப்பாக செயல்படுவார்கள். விளையாட்டு துறை மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

செவ்வாய் - குரு சேர்க்கை 

நட்பு கிரகங்களான செவ்வாய் உடன் குரு சேர்ந்தால் அற்புதமான பலன்களை தரும். ஆனாலும் செவ்வாய் யாருடன் சேர்ந்தாலும் யுத்தம் செய்வார் என்பதால் ஆசிரியர்கள் உடன் பிரச்னைகள் ஏற்படலாம். இந்த இணைவு குரு மங்கள யோகம் ஏற்படும். அரசில் செல்வாக்கு ஏற்படும், உத்யோகத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும். 

செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை 

செவ்வாய் உடன் சுக்கிரன் இணைந்தால், ஜாதகர் கண்ட உடன் காதல், காம உணர்வில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கலைகளை கற்றுக் கொண்டு சாதிக்கும் திறமை ஏற்படும். 

செவ்வாய் - சனி சேர்க்கை 

செவ்வாய் உடன் சனி சேர்வது என்பது வேலை செய்யும் இடங்களில் குளறுபடி ஏற்படலாம். மேலதிகாரிகள் உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இதனால் வேலைகள் பறிபோகும் நிலை உண்டாகலாம். 

செவ்வாய் - ராகு சேர்க்கை 

செவ்வாய் உடன் ராகு சேர்ந்தால், ராகு பலம் கூடும். இதனால் சொகுசான உத்யோகம் கிடைக்கும். சகோதர வகையில் சூழ்ச்சிகள் ஏற்படலாம். இந்த அமைப்பு 10 மற்றும் 11ஆம் இடங்களில் இருந்தால் அபரிவிதமான செல்வம் ஏற்படும்.  

செவ்வாய்-கேது சேர்க்கை 

செவ்வாய் உடன் கேது இணைந்தால், செய்யும் உத்யோகத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். கேதுவுக்கு உரிய தொழில்களில் ஏற்படும் போது நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் செல்லும் போது நன்மைகள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel