தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran: ‘பெண்களால் யோகம் யாருக்கு? உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளது!’ இதோ முழு விவரம்!

Sukran: ‘பெண்களால் யோகம் யாருக்கு? உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளது!’ இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Apr 12, 2024 03:53 PM IST

“ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் நல்ல மனைவி, நல்ல இல்வாழ்கை, வீடு, வாகன வசதி ஆகியவை கிடைக்கும். அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன், குரு பகவானுக்கு அடுத்த நிலையில் உள்ள சுபராக உள்ளார்”

சுக்கிரன்
சுக்கிரன்

ஒருவருக்கு லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் மிக அழகான தோற்றம் உடையாவராக இருப்பார். கணவனாக இருந்தால் மனைவி இடமும், மனைவியாக இருந்தால் கணவன் இடமும் நேசம் அதிகமாக இருக்கும். கலை ஆர்வமும், கணித ஆர்வமும் நன்றாக இருக்கும். நீண்ட ஆயுளும், கவரும் கண்களையும் இவர்கள் பெற்று இருப்பார்கள். ஆழமான சிந்தனையாளர்களாக இருக்கும் இவர்களின் உடல் குளிர்ச்சி உடையதாக இருக்கும். 

சூரியனுக்கு 10 டிகிரிக்கு உள் சுக்கிரன் இருந்தால் அந்த சக்தியை சூரியன் எடுத்துக் கொள்வார், அதே போல் சுக்கின் ராகு, கேதுக்கள் உடன் சேர்ந்து இருந்தால் பலன் மாறுபடும். 

சுக்கிரன் 2ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும், இருந்தாலும் பிற பெண்களின் மீது ஜாதகருக்கு கவனம் செல்லும். கவரும் வகையிலான பேச்சாற்றல், படித்தவர் போன்ற தோற்றம் உள்ளிட்டவை இவர்களுக்கு இருக்கும். இவர்களின் குடும்பத்தின் மீது தனி கவனம் செலுத்துவார்கள். 

3ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் வரும் கணவனோ அல்லது மனைவியோ மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு முன் கோபம் அதிகமாக இருக்கும், இவர்களுக்கு பேச்சில் கவனம் தேவை, சமூகத்தில் கெத்தாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருவர்களுக்கு இருக்கும். அதே சமயம் சற்று கூச்சமும் இவர்களுக்கு உண்டு. காதல், சிற்றின்பம் ஆகியவற்றில் அதிக அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

4ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பது சிறப்பான பலன்களை தரும், இதனால் ஜாதகர் திக் பலத்தை பெறுவார்.  இவர்களுக்கு சொந்த வீடு கட்டும் வாய்ப்பும், சுகமான வாழ்கை, நீண்ட ஆயுள் உள்ளிட்டவை கிடைக்கும்.  பிற பெண்கள் மீதான மோகமும் இவர்களுக்கு இருக்கும். நினைக்கும் வாகனத்தை வாங்கும் வாய்ப்புகளும், சொகுசு வாழ்கையும் கிடைக்கும். 

5ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், மகாலட்சுமியின் அம்சம் இருப்பதால் அதிக பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உண்டு. 5இல் சுக்கிரன் இருந்தால் அதிர்ஷ்டசாலி என்று சொல்வார்கள், இவர்களுக்கு கடவுள் ஆசி அதிகமாக உண்டு. உல்லாச பிரியர்களான இவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கண்டிப்பாக கிடைக்கும். இவர்கள் செயல்படும் துறைகளில் பாண்டித்யம் பெற்ற நபராக உருவெடுப்பார்கள். 

6ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மறைமுக எதிரிகள் அமைய அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு தாம்பத்திய சுகம் மீது நாட்டம் சற்று குறைவாக இருக்கும். விளையாட்டில் அதீக ஆர்வம் கொண்டவர்களாக இருவர்கள் விளங்குவர். ஆணாக இருந்தால் பெண்ணிடமோ அல்லது பெண்ணாக இருந்தால் ஆணிடமுமோ வெறுப்புகளை சந்திக்க நேரும் நிலை உண்டாகும். 

7ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அழகான மனைவி அமையும், பகைவரால் கூட நன்மை ஏற்படும். இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு. 

8ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் செல்வந்தர் ஆக அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் கணவன், மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

9ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மாபெரும் பாக்கியசாலியாக இருப்பார்கள். பெண் வர்க்கத்தால் நிறைய செல்வம் இவர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக மனைவியால் செல்வ பலம் கூடும். கலை ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் வியாபாரம் செய்தால் பெரிய வெற்றி அடைவார்கள். 

10ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் வாகன யோகம் உண்டாகும். திருமணத்திற்கு பிறகு வாழ்கை நன்றாக இருக்கும். கால்நடை மற்றும் உணவு, சினிமா, நாடகம் சார்ந்த தொழில்களில் சிறந்து விளங்க வாய்ப்பு உண்டு. 

11ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் தர்ம எண்ணங்கள் உண்டாகும். நல்ல வாழ்கை துணை அமையும். அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் வெற்றி கிடைக்கும். 

12ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் ராஜபோக வாழ்கை கிடைக்கும். அழகிய ஆடை, அணிகலன்களை அணியும் நிலை உண்டாகும். செல்வ செழிப்பு இவர்களுக்கு அதிகம் இருக்கும். இவர்களுக்கு தாம்பத்யம் தாமதமாக கிடையாதலும் சுகமாதாக அமையும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel