Pava Kathari Yogam: ராஜ யோகம் தெரியும்? பாவ கத்திரி யோகம் தெரியுமா? இதோ முழு விவரம்!
”எந்த ஒரு ஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் பாவிகள் அமர்கிறார்களோ அந்த ஸ்தானம் வலு விழந்து பலம் குறையும்”
ஜாதகத்தில் லக்னம், தன ஸ்தானம், தைரிய ஸ்தானம், சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், ருன ஸ்தானம், சப்தம ஸ்தானம், அஷ்டம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், கர்ம ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானம் ஆகிய 12 பாவங்கள் உள்ளது.
இந்த பாவங்களை வலுப்பெறச்செயும் சூட்சும விதிகளில் கத்தரி யோகங்கள் வருகின்றன. ஒரு பாவத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் இயற்கை பாவிகள் எனப்படும் சனி, சூரியன், தேய்பிறை சந்திரன், ராகு, கேது, பாவிகளுடன் சேரும் புதன் ஆகிய கிரகங்கள் அமர்ந்தால் அந்த ஸ்தானம் பாவ கத்திரி யோகத்திற்கு ஆளாகும்.
சுக்கிரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம், குரு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கும் கிரகம் ஆனால் மிக பெரிய கிரகம். எனவே முழு சுபர் ஆன குருவும், முக்கால் சுபர் ஆன சுக்கிரனும், எந்த பாவி கிரகத்தோடு சேராத புதனும், வளர்பிறை சந்திரனும் சுபர்களாக விளங்குவர்.
எந்த ஒரு ஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் பாவிகள் அமர்கிறார்களோ அந்த ஸ்தானம் வலு விழந்து பலம் குறையும்.
எந்த ஒரு ஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் இயற்கை சுபர்கள் அமரும் போது சுப கத்திரி யோகம் உண்டாகிறது.
பாவ கர்த்தாரி யோகம், ஒரு ஜாதகனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளை கலவையாக தரக்கூடியது. சுப கிரகங்களின் சூழல், பாவ கிரகத்தின் தீய தாக்கங்களை குறைக்கும். அதே நேரத்தில், பாவ கிரகம், சுப கிரகங்களின் நன்மைகளை ஓரளவு பாதிக்கக்கூடும்.
பாவ கர்த்தாரி யோகம், ஒரு ஜாதகனின் வாழ்க்கையில் சவால்களை அதிகரிக்கக்கூடியது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். தடைகள், போராட்டங்கள் மற்றும் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாக உள்ளது. அதே நேரத்தில், இந்த அனுபவங்கள், ஜாதகனை வலுப்படுத்தவும், வாழ்க்கையின் பாடங்களை கற்றுக்கொள்ளவும் உதவும் என்கின்றனர்.
பாவ கர்த்தாரி யோகம் உருவாகும் ராசி மற்றும் பாவ கிரகத்தை பொறுத்து, குறிப்பிட்ட பலன்கள் மாறுபடும். பொதுவாக, பணம், ஆரோக்கியம், உறவுகள், கல்வி, தொழில் போன்ற துறைகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.
டாபிக்ஸ்