Parvatha Raja Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம், பதவி, புகழை தேடி கொடுக்கும் பர்வத ராஜயோகம் யாருக்கு?
Parvatha Raja Yogam: ஜோதிட விதிப்படி யோகங்கள் அனைத்தும் யோகங்கள் அல்ல; தோஷங்கள் அனைத்தும் தோஷங்கள் அல்ல. சில நிலைகளில் தோஷங்களிலும் நன்மைகள் ஏற்படும், சில நிலைகளில் யோகங்களிலும் தீமைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.
பர்வத ராஜயோகம் ஏற்படுவது எப்படி?
7ஆம் அதிபதி அதிக வலுவுடன் இருப்பவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு பர்வத ராஜயோகம் சிறப்பாக வேலை செய்யும்.
மேஷம் லக்னத்திற்கு சுக்கிரன், ரிஷபம் லக்னத்திற்கு செவ்வாய், மிதுனம் லக்னத்திற்கு குரு, கடகம் லக்னத்திற்கு சனி, சிம்ம லக்னத்திற்கு சனி, கன்னி லக்னத்திற்கு குரு பகவான், துலாம் லக்னத்திற்கு செவ்வாய், விருச்சிகம் லக்னத்திற்கு சுக்கிரன், தனுசு லக்னத்திற்கு புதன், மகரம் லக்னத்திற்கு சந்திரன், கும்பம் லக்னத்திற்கு சூரியன், மீனம் லக்னத்திற்கு புதன் ஆகியோர் 7ஆம் அதிபதிகளாக வருகின்றனர்.
மேற்கண்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் அதிபதி அதிக வலுப்பொருந்திய நிலையில், தனது நட்பு, ஆட்சி வீடுகளில் வேலை செய்தால் பர்வத ராஜயோகம் வேலை செய்யும்.
ஜோதிட விதிப்படி யோகங்கள் அனைத்தும் யோகங்கள் அல்ல; தோஷங்கள் அனைத்தும் தோஷங்கள் அல்ல. சில நிலைகளில் தோஷங்களிலும் நன்மைகள் ஏற்படும், சில நிலைகளில் யோகங்களிலும் தீமைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
பர்வத ராஜயோகம் ஏற்படும் விதம்
உதாரணமாக துலாம் லக்னக்காரர்களுக்கு செவ்வாய் அதிக வலுப்பெற்றால் பர்வத ராஜயோகம் வேலை செய்யும். கடகத்தில் செவ்வாய் இருக்கும் போது, அவர் நீசம் பெற்றாலும், அங்கு அவர் திக்பலம் பெறுவதால் பர்வத ராஜயோகம் ஏற்படும்.
இரண்டாவதாக மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறார். ஆனால் 4ஆம் இடத்தில் ஸ்தான பலம் பெறுவதன் மூலம் பர்வத ராஜயோகம் ஏற்படுகிறது. மேலும் செவ்வாய் இயற்கை பாவி என்பதால், ஒரு சுபகிரகத்தின் பார்வை தேவைப்படுகின்றது.
இதுமட்டுமின்றி லக்னத்திற்கு 12ஆம் அதிபதி வலுப்பெற்று நட்பு நிலையில் இருக்கும்போது பர்வத ராஜயோகம் ஏற்படும். உதாரணமாக மேஷ லக்னத்தின் 12ஆம் அதிபதியான குரு, பாக்கிய ஸ்தானத்தில் வலுப்பெற்றால் பர்வத ராஜயோகம் ஏற்படும்.
துலாம் லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் வலுப்பெற்ற நிலையில் அமர்ந்தலும், 12ஆம் இடத்திற்கு உரிய புதன், பாக்கிய ஸ்தானம் எனும் 9ஆம் இடத்தில் வலுபெற்ற நிலையில் இருப்பது பர்வத ராஜயோகத்தை தரும்.
விருச்சிக லக்னக்காரர்களுக்கு சுக்கிர்ன 5ஆம் இடத்தில் உச்சம் பெறுவதன் மூலம் பர்வத ராஜயோகம் சிறப்பாக வேலை செய்யும் தன்மையை ஏற்படுத்தும்.
பர்வத ராஜயோகத்தின் பலன்கள்
அதிகாரம், பதவி, அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம், உழைப்பால் மேன்மை அடைவது உள்ளிட்ட பலன்களை பர்வத ராஜயோகம் ஏற்படுத்தி தரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.