Naabi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குரு தரும் நாபி யோகத்தால் குன்று மீது ஏறப்போகும் ராசிகள்! அடேங்கப்பா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Naabi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குரு தரும் நாபி யோகத்தால் குன்று மீது ஏறப்போகும் ராசிகள்! அடேங்கப்பா!

Naabi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குரு தரும் நாபி யோகத்தால் குன்று மீது ஏறப்போகும் ராசிகள்! அடேங்கப்பா!

Kathiravan V HT Tamil
Jul 30, 2024 02:13 PM IST

Naabi Yogam: லக்னத்தில் குரு இருந்தால், அவர் அங்கு திக் பலம் அடைவார். ஒரு கிரகம் ஆட்சி வீட்டுக்கு அடுத்த நிலையில் திக்பலத்தின் போதுதான் அதிக வலுவை பெறுகிறார். லக்னத்தில் குரு பகவான் இருக்கும் போது பிறந்தாலே அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி ஆவார். இப்படி பிறந்தவர்கள் ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Nabi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குரு தரும் நாபி யோகத்தால் குன்று மீது ஏறப்போகும் ராசிகள்! அடேங்கப்பா!
Nabi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ குரு தரும் நாபி யோகத்தால் குன்று மீது ஏறப்போகும் ராசிகள்! அடேங்கப்பா!

குரு பகவான் தரும் நாபி யோகம் 

ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும், அவரது லக்ன வீட்டில் குரு பகவான் இருக்கும் போது இந்த நாபி யோகம் உண்டாவதற்கான முதல் விதியாக உள்ளது. உங்கள் லக்னத்திற்கு 11ஆம் அதிபதி எனப்படும் லாபாதிபதி குரு பகவான் வீட்டில் அமர வேண்டும். இந்த விதை பொருந்தி வந்தால் குரு பகவான் மூலம் உண்டாகும் நாபி யோகம் ஏற்படும். 

திக் பலம் பெறும் குரு பகவான் 

லக்னத்தில் குரு பகவான் இருந்தால், அவர் அங்கு திக் பலம் அடைவார். ஒரு கிரகம் ஆட்சி வீட்டுக்கு அடுத்த நிலையில் திக்பலத்தின் போதுதான் அதிக வலுவை பெறுகிறார். லக்னத்தில் குரு பகவான் இருக்கும் போது பிறந்தாலே அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி ஆவார். இப்படி பிறந்தவர்கள் ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

லக்னத்தில் குரு பகவான் இருந்தால் லக்னம் புனிதம் அடையும், தெளிந்த சிந்தனை, புத்திக்கூர்மை, இரக்க குணம் உள்ளிட்ட தன்மைகள் ஜாதகருக்கு உண்டாகும். 

எடுத்துக்காட்டாக துலாம் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். லக்னத்தில் குரு பகவான் உள்ளார் எனில், துலாம் லக்னத்தின் லாபாதிபதியான சூரிய பகவான் தனுசு அல்லது மீனம் ராசியில் இருந்தால் நாபி யோகம் ஏற்படும். 

மேஷ லக்னத்தை எடுத்துக் கொண்டால் லக்னத்தில் குரு பகவான் உள்ளார். மேஷ லக்னத்தின் லாபாதிபதியான சனி பகவான் தனுசு அல்லது மீனம் ராசியில் அமர்ந்து இருக்கும் போது இந்த நாபி யோகம் உண்டாகும். 

நாபி யோகத்தின் பலன்கள் 

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த மனிதனையும் உயரத்தை அடைய வைக்கும் யோகமாக இந்த நாபி யோகம் உள்ளது. சூழ்ச்சுமங்கள் மூலம் உபயோகங்கள் என்பது பலதரப்பட்ட மனிதர்களை மத்திம வயதிற்கு பிறகு செல்வந்தர் ஆக மற்றும் தன்மை கொண்டவை ஆகும். 

பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தரக்கூடிய யோகங்களில் நாபி யோகமும் ஒன்று ஆகும். குரு பகவானின் ஆசி பெறாமல் ஒருவரால் அவ்வளவு எளிதில் பொருள் ஈட்ட முடியாது. 

ஒருவர் கல்வி, பூர்வீகம், உத்யோகம், தொழில், முயற்சி, நிதி நிர்வாக திறன் மூலம் பொருளாதாரத்தை அடைய குரு பகவானின் துணை மிக அவசியம் ஆகும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner