Mahadhana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை’ பணம் கொண்டும் மஹாதன யோகம் தரும் பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mahadhana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை’ பணம் கொண்டும் மஹாதன யோகம் தரும் பலன்கள்!

Mahadhana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை’ பணம் கொண்டும் மஹாதன யோகம் தரும் பலன்கள்!

Kathiravan V HT Tamil
Jun 17, 2024 06:00 AM IST

Mahadhana Yogam: ஒரு லக்னத்தில் 2ஆம் இடத்திற்கு உரிய தனாதிபதியும், 11ஆம் இடத்திற்கு உரிய லாபாதிபதியும், 9ஆம் இடத்திற்கு உடைய தஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டு வலுப்பெற்று, இவர்களில் யாராவது ஒருவர் தசை நடத்தினால் மஹாதன யோகம் உண்டாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Mahadhana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை’ பணம் கொண்டும் மஹாதன யோகம் தரும் பலன்கள்!
Mahadhana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை’ பணம் கொண்டும் மஹாதன யோகம் தரும் பலன்கள்!

மகாதன யோகம் உண்டாவது எப்படி?

பெரும் பொருளை ஈட்டக்கூடிய அம்சத்தை தரக்கூடிய யோகமாக மஹாதன யோகம் உள்ளது. ஒரு லக்னத்தில் 2ஆம் இடத்திற்கு உரிய தனாதிபதியும், 11ஆம் இடத்திற்கு உரிய லாபாதிபதியும், 9ஆம் இடத்திற்கு உடைய பாக்கியாதிபதியும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டு வலுப்பெற்று, இவர்களில் யாராவது ஒருவர் தசை நடத்தினால் மஹாதன யோகம் உண்டாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

உதாரணமாக ஒரு கும்ப லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இதன் 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரியவராக குரு பகவானும், 9ஆம் இடத்திற்கு உரியவராக சுக்கிர பகவானும் உள்ளார். 

குரு, சுக்கிரன் தொடர்பு கொண்டு, இருவரில் ஒருவர் ஆட்சி அல்லது உச்ச வலிமை பெற்ற நிலையில், லக்னாதிபதி சனி பகவான் நன்றாக இருந்தால் சனி தசையிலோ, சுக்கிர தசையிலோ அல்லது குரு தசையிலோ மஹாதன யோகம் உண்டாகும். 

லக்ன வாரியாக மகாதன யோகம் 

மேஷம் 2க்கு உடையவர் சுக்கிரன், 11க்கு உடையவர் சனி, 9ஆம் அதிபதி குரு என்பதால், குரு, சுக்கிரன் இணைவு  நன்றாக இருந்தால் மேஷ லக்னத்திற்கு மஹாதன யோகம் உண்டாகும். 

ரிஷபம் லக்னத்திற்கு புதன், குரு, சனி ஆகியோர் நல்ல நிலையில் இணைந்து, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும். 

மிதுனம் லக்னத்திற்கு சந்திரன், செவ்வாய், சனி ஆகியோர் தொடர்பை பெற்று, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.

கடகம் லக்னத்திற்கு சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோர் தொடர்பை பெற்று யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.

சிம்மம் லக்னத்திற்கு புதன், சூரியன் தொடர்பை கொண்டு செவ்வாய் நல்ல நிலையில் தொடர்பை பெற்றாறு யாரேனும் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.

கன்னி லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன், புதன் வலுப்பெற்றால் மஹாதன யோகம் உண்டாகும்.

துலாம் லக்னத்திற்கு செவ்வாய், புதன், சூரியன் மூலம் மஹாதன யோகம் உண்டாகும்.

விருச்சிகம் லக்னத்திற்கு குரு, புதன், சந்திரன் ஆகியோர் மூலம் மஹாதன யோகம் உண்டாகும்.

தனுசு லக்னத்திற்கு சனி, சுக்கிரன், சூரியன் மூலம் மஹாதன யோகம் உண்டாகும்.

மகரம் லக்னத்திற்கு சனி, செவ்வாய், புதன் மூலம் மஹாதன யோகம் உண்டாகும்.

கும்பம் லக்னத்திற்கு குரு, சுக்கிரன், சனி ஆகியோர் மூலம் மஹாதன யோகம் உண்டாகும்.

மீனம் லக்னத்திற்கு செவ்வாய், சனி, குரு மூலம் மஹாதன யோகம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner