Maha Purusha Yogam: மேஷம் முதல் மீனம் வரை! 5 கிரகங்கள் தரும் பஞ்ச மகா புருஷ யோகம் யாருக்கு? உலகையே ஆள வைக்கும் அற்புதம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maha Purusha Yogam: மேஷம் முதல் மீனம் வரை! 5 கிரகங்கள் தரும் பஞ்ச மகா புருஷ யோகம் யாருக்கு? உலகையே ஆள வைக்கும் அற்புதம்!

Maha Purusha Yogam: மேஷம் முதல் மீனம் வரை! 5 கிரகங்கள் தரும் பஞ்ச மகா புருஷ யோகம் யாருக்கு? உலகையே ஆள வைக்கும் அற்புதம்!

Kathiravan V HT Tamil
Published Jul 23, 2024 06:00 AM IST

Maha Purusha Yogam: குரு, சனி, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய ஐந்து கிரகங்களை குஜாதிபர்கள் என்று கூறுவார்கள். இந்த 5 கிரகங்கள்தான் பஞ்சமகா புருஷ யோகத்தை ஏற்படுத்துவார்கள்.

Maha Purusha Yogam: மேஷம் முதல் மீனம் வரை! 5 கிரகங்கள் தரும் பஞ்ச மகா புருஷ யோகம் யாருக்கு? உலகையே ஆள வைக்கும் அற்புதம்!
Maha Purusha Yogam: மேஷம் முதல் மீனம் வரை! 5 கிரகங்கள் தரும் பஞ்ச மகா புருஷ யோகம் யாருக்கு? உலகையே ஆள வைக்கும் அற்புதம்!

இது போன்ற போட்டோக்கள்

குரு தரும் அம்ச  யோகம் 

பஞ்ச மகா புருஷ யோகத்தில் முதல் தர யோகத்தை குரு பகவான் உண்டாக்குவார். எந்த ஒரு லக்னத்திற்கும், ராசிக்கும் குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர ஸ்தானம் என்று சொல்லக்  கூடிய 4, 7, 10ஆம் இடத்தில் அமர்ந்தால் அம்ச யோகம் கொண்ட ஜாதகமாக அமையும். 

இந்த அம்ச யோகம் ஒருவருக்கு கிடைத்தால், நல்ல கல்வி, பெரிய மனிதர்கள் ஆதரவு, நல்ல தாய் தகப்பன், பொருளாதாரத்தில் முன்னேற்றம், சமுதாயத்தில் மேன்மை, மதிக்கத் தக்க யோக்கிதைகள், பதவிகள், உயர்நிலை, நீண்ட ஆயுள், ஒழுக்கம் உள்ளிட்டவை கிடைக்கும். 

இந்த யோகம் குரு பகவானால் ஏற்படுகின்றது, உங்கள் லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 4, 7, 10 ஆம் இடங்களில் குரு பகவான் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று இருந்தால் இந்த யோகம் உண்டாகும். 

மேஷம் லக்னத்திற்கு குரு கடகத்தில் இருக்கும் போது காணப்படும். ரிஷபம் ராசிக்கு அம்ச யோகம் ஏற்படாது. மிதுனம் லக்னத்திற்கு தனுசு மற்றும் மீனத்தில் குரு பகவான் ஆட்சி பெறும் போது அம்ச யோகம் ஏற்படும். 

சுக்கிரன் தரும் மாளவிகா யோகம் 

லக்னத்திற்கு கேந்திரத்தில் 4, 7, 10ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றால் மாளவிகா யோகம் உண்டாகும். இதன் மூலம் வாழ்கையில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் லட்சுமி கடாச்சம், எல்லா இன்பங்களையும் அனுபவிப்பது, மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது, உலக சுற்றுலா செல்வது, வெளிநாடுகளில் வசதியாக வாழ்வது உள்ளிட்ட யோகம் உண்டாகும். 

மேஷம் லக்னத்திற்கு துலாம் ராசியில் சுக்கிரன் இருக்கும் போது மாளவிகா யோகம் உண்டாகும். ரிஷபம் ராசிக்கு மாளவிகா யோகம் கிடைக்காது. மிதுனம் லக்னத்திற்கு மீனம் ராசியில் சுக்கிரன் இருந்தால் மாளவிகா யோகம் உண்டாகும். கடக லக்னத்திற்கு துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறும் போது மாளவிகா யோகம் உண்டாகும். 

புதன் தரும் பத்ர யோகம் 

புதன் தரும் பத்ர யோகம் உங்கள் லக்னத்திற்கு 4, 7, 10ஆம் இடத்தில் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருக்கும் போது உண்டாகின்றது. தெளிந்த அறிவு, உயரிய கல்வி, கற்பதால் மேன்மை, வித்தைகளால் புகழ் பெறுவது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.  

செவ்வாய் தரும் ருச்சக யோகம் 

ருச்சக யோகம் என்பது லக்ன கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறும் போது கிடைக்கும் யோகம் ஆகும். இந்த யோகம் மூலம் ஆட்சி, அதிகாரம், அடக்குமுறை, தான் எனும் செயல்திறன், வெற்றி, முதன்மை தன்மை, தலைமை பொறுப்பு உள்ளிட்ட நன்மைகளை கொடுக்கும். காவல்துறை, தீயனைப்பு துறை, ராணுவத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த ருச்சக யோகம் சிறப்பை தரும். பூரண ஆயுள் பலத்தை இந்த யோகம் ஏற்படுத்தி தரும். 

சனி பகவான் தரும் சச யோகம் 

லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 4, 7, 10 ஆம் இடங்களில் சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் சச யோகம் உண்டாகும். இந்த சச யோகம் மக்கள் செல்வாக்கை பெற்று தரும். அசைக்க முடியாத மக்கள் தலைவர்களாக இவர்கள் மாறுவார்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.