தமிழ் செய்திகள்  /  Astrology  /  Benefits Of Maha Bhagya Yoga In Astrology

Maha Bhagya Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஆட்சியில் அமர வைக்கும் மகா பாக்ய யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Mar 05, 2024 04:01 PM IST

“மற்ற கிரகங்களின் அமைப்போ, திசைகளோ, புத்திகளோ, கோச்சாரமோ இந்த யோகம் கொண்டவர்களை பெரிதும் பாதிக்காது”

மகா பாக்ய யோகம்
மகா பாக்ய யோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

மகா பாக்ய யோகம் ஒருவரை வல்லமையும், அதிகாரமும் மிக்க நபராக மாற்றும் தன்மை கொண்டது. நீங்கள் பகலில் பிறந்து, உங்கள் லக்னம், ராசி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஆண் ராசிகளில் அமைய பெற்றால் மகா பாக்ய யோகம் ஏற்படுகிறது. 

சித்திரை, ஆனி, ஆவணி, ஐப்பசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஆண் ராசிக்கான மாதங்களாக உள்ளது. இந்த மாதங்களில் பகலில் பிறக்கும் நபர்களுக்கு சூரியன் ஆண் ராசியில் இருப்பார். அதே போல் சந்திரன் இந்த ஆண் ராசிக்களில் பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 

பகலில் பிறப்பெடுத்து ஆண் லக்னம், ஆண்ராசியாக இருக்க வேண்டும், இல்லை எனில் இரவில் பிறப்பெடுத்து பெண் லக்னம், பெண் ராசியாக இருந்தால் இதே மகா பாக்ய யோகம் ஏற்படும். 

பெண் ராசிகளில் இரவில் பிறப்பெடுத்து பெண் லக்னம் மற்றும் பெண் ராசியாக இருந்து, இந்த ராசிகளில் சந்திரனில் இருக்கும் போது பிறப்பவர்களுக்கும் மகா பாக்ய யோகம் ஏற்படும். 

மற்ற கிரகங்களின் அமைப்போ, திசைகளோ, புத்திகளோ, கோச்சாரமோ இந்த யோகம் கொண்டவர்களை பெரிதும் பாதிக்காது. 

மகாபாக்ய யோகம் ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் மற்றும் செழிப்பை பெருகச் செய்யும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வசதியாகவும், எந்த பொருளாதார தடையும் இல்லாமல் வாழ்வார்கள். இந்த யோகம் ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி மற்றும் சாதனைகளைத் தரும். அவர்கள் எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள்.

 மகாபாக்ய யோகம் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்தியைத் தரும்.   ஒருவரின் வாழ்க்கையில் புகழ் மற்றும் மரியாதையை பெருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்