Kela Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கேள யோகம் யாருக்கு?
”குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதற்கான வழிகளையும், சாமர்த்தியத்தையும் ஜாதகத்திற்கு கற்றுக் கொடுத்துவிடுவார்”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படுகிறது. குரு பகவானும், கேது பகவானும் கூடி நிற்கும் இடத்தில் கேள யோகம் உண்டாகிறது. இயற்கை சுபர் என அழைக்கப்படும் குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். தனத்திற்கு காரகமான குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதற்கான வழிகளையும், சாமர்த்தியத்தையும் ஜாதகத்திற்கு கற்றுக் கொடுத்துவிடுவார்.
பொருள் ஈட்டுபோது சிக்கனமாகவும், நேர்மையாகவும் இருப்பதற்கு குரு பகவான் வழிகாட்டுவார். ஒரு ஜாதகத்தில் குரு பகவான் வலுப்பெருவது மிகப்பெரிய நன்மையைத் தரும்.
இறை நம்பிக்கை, தெளிந்த ஞானம், தெளிந்த அறிவை கொண்டுக்க கூடிய கிரகமாக கேது விளங்குகிறார். குரு, கேது இணைவு என்பது இருவரும் சேர்ந்து இருந்தால் மட்டுமே கிடக்க கூடியது, பார்வையால் வருவது அல்ல.
குருவும், கேதுவும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் ஆவர். மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம், கடகம், சிம்மம் லக்னத்தினருக்கு கேள யோகம் அதி அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.
கேள யோகத்தின் பலன்கள்:
கேள யோகத்தால் ஜாதகருக்கு அளவுகடந்த செல்வம் சேர்க்கும் தன்மை கொண்டது.
கேள யோகம் உயர்ந்த பதவி, அதிகாரம் கிடைக்க வழி வகுக்கும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெருகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆன்மீக ஞானம் பெற வழி வகுக்கும்.
எதிரிகளை வெல்லும் சக்தியை தரும்.
நோய், நொடிகள் நீங்கும்.
கேள யோகம் அனைத்து ஜாதகங்களுக்கும் அமையாது. கேள யோகம் அமைந்திருந்தாலும், அதன் பலன்கள் ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் அமைப்பை பொறுத்து மாறுபடும். கேள யோகத்தின் பலன்களை முழுமையாக பெற, ஜாதகர் நல்ல கர்மங்களை செய்ய வேண்டும்.
டாபிக்ஸ்