Chatur Gragi Yoga in Taurus: ரிஷப ராசியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் 4 ராசிகள்.. காதல் கைகூடி செல்வந்தராகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chatur Gragi Yoga In Taurus: ரிஷப ராசியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் 4 ராசிகள்.. காதல் கைகூடி செல்வந்தராகும் ராசிகள்

Chatur Gragi Yoga in Taurus: ரிஷப ராசியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் 4 ராசிகள்.. காதல் கைகூடி செல்வந்தராகும் ராசிகள்

Marimuthu M HT Tamil Published May 13, 2024 03:02 PM IST
Marimuthu M HT Tamil
Published May 13, 2024 03:02 PM IST

Chatur Gragi Yoga in Taurus: ரிஷப ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்று சேர்ந்து உண்டாகும் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Chatur Gragi Yoga in Taurus: ரிஷப ராசியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் 4 ராசிகள்.. காதல் கைகூடி செல்வந்தராகும் ராசிகள்
Chatur Gragi Yoga in Taurus: ரிஷப ராசியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் 4 ராசிகள்.. காதல் கைகூடி செல்வந்தராகும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

அப்படி, மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவரைப் பின் தொடர்ந்தது போல், சூரிய பகவானும் ரிஷப ராசிக்குள் சஞ்சரிக்கிறார். பின், புதனும் ரிஷப ராசியில் நுழையவுள்ளார். இதனால் ஒரேநேரத்தில் குரு பகவான், சூரிய பகவான், புதன் பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்று சேர்ந்து திரிகிரக யோகம் உண்டாகிறது.

மேலும் சுக்கிரனும் ரிஷப ராசியில் உள்ள மூன்று கிரகங்களோடு சேர்ந்து, சதுர் கிரகி யோகத்தை உண்டு செய்கின்றனர்.

குரு மற்றும் சுக்கிர பகவானும் இணைவதால் கஜலட்சுமி யோகமும், சூரியனும் புதனும் இணைவதால் புதாத்திய யோகமும், சூரியனும் சுக்கிரனும் இணைந்து சுக்ராதித்ய அதிர்ஷ்டமும் உண்டாகிறது.

குரு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் ஒன்று சேர்வதால், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம்: 

 

சதுர் கிரகி யோகமானது, ரிஷப ராசியின் தொடக்க இல்லத்தில் தொடங்குவதால் எதிர்பாராத விஷயங்களை, இக்காலத்தில் எதிர்பார்ப்பீர்கள். வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை - சச்சரவுகள் நீங்கும். அடிமேல் அடிவிழுந்திருந்தாலும் இனி போகக் கூடிய காலத்தில், தொழில் முனைவோருக்கு நிகர லாபம் அதிகமாக கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் ஓயும். வண்டி, வாகனம் இல்லாதவர்கள் அதை லோன்போட்டுஆவது வாங்குவீர்கள். வீடில்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் வாய்க்கும். உங்களிடம் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாமல் இருப்பவர்கள், இக்காலத்தில் மீண்டும் செலுத்துவார்கள்.

கன்னி: 

 

இந்த ராசியினருக்கு குரு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கையால், மனதில் ஒரு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நினைவுத்திறன் கூடும். அரசு வேலைக்குப் படித்து பரீட்சை எழுதுபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை உண்டாகும். ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிரச்னைகள், கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் நீங்கி ஒன்றுசேர்வர். காதல் கைகூடாத கன்னி ராசியினருக்கு, இக்காலத்தில் புரோபோஸ் செய்தால் காதல் கைகூடும். தொழில்முனைவோருக்கு உரிய வருவாய் வந்துசேரும்.

மகரம்:

  இந்த ராசியினருக்கு குரு, சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கையால், மகர ராசியினருக்கு சதுர்கிரக யோகம் உண்டாகும். இக்காலத்தில் நன்கு பணியாற்றும் மகர ராசியினருக்கு ஊதிய உயர்வு கிட்டும். சரியான வேலை இல்லாமல் கஷ்டப்படும் மகர ராசியினருக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்