பல்லி விழும் பலன்கள்! தங்கம் வாங்க கூட வாய்ப்பு இருக்கா! பக்கா லிஸ்ட் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பல்லி விழும் பலன்கள்! தங்கம் வாங்க கூட வாய்ப்பு இருக்கா! பக்கா லிஸ்ட் உள்ளே!

பல்லி விழும் பலன்கள்! தங்கம் வாங்க கூட வாய்ப்பு இருக்கா! பக்கா லிஸ்ட் உள்ளே!

Suguna Devi P HT Tamil
Published Oct 25, 2024 06:02 PM IST

இந்து மதத்தில் எழுதப்பட்ட சாஸ்திரங்களில் வீட்டில் உள்ள பல்லி நம் மீது விழுந்தால் பல பலன்கள் உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. பல்லி என்பது அபசகுனத்தின் ஒரு சின்னமாக பார்க்கப்பட்டாலும் சில சமயங்களில் நம் உடல் உறுப்புகளில் சில சில இடங்களில் பல்லி விழும்போது நேர்மறையான பலன்களையும் அது அளிக்கிறது.

பல்லி விழும் பலன்கள்! தங்கம் வாங்க கூட வாய்ப்பு இருக்கா! பக்கா லிஸ்ட் உள்ளே!
பல்லி விழும் பலன்கள்! தங்கம் வாங்க கூட வாய்ப்பு இருக்கா! பக்கா லிஸ்ட் உள்ளே!

இது போன்ற போட்டோக்கள்

தலை முதல் பாதம் வரை 

ஒருவரின் தலையில் பல்லி விழுந்தால் அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மனநிம்மதி இழத்தல் ஆகியவை நடக்கக்கூடும். இதுபோன்ற கெட்ட சகுனத்தை இது உணர்த்தும். பல்லி தலையில் விழாமல் தலைமுடியில் பட்டால் ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் எனக் கூறப்படுகின்றது. நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது.

 நெற்றியில் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி அல்லது புகழ் திட்டம் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது. முகத்தில் பல்லி விழுந்தால் அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும் என அர்த்தமாகும். புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜ பதவி எனும் உயர் பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அதுவே கண்கள் அல்லது கண்களின் மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்பட கூடும் என்பது அர்த்தம். உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் தினம் முழுவது ம் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். 

தங்கம் வாங்கும் யோகம்

நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட உள்ளது என்பது அர்த்தமாகும். இதில் பல்லி விழுந்தால் வரும் காலத்தில் நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம். தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் ஆன தங்கம் வைரம் ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெறும். தொடை பகுதியில் பல்லி விழுந்தால் பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும். வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்க பெறும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்