Tamil News  /  Astrology  /  Benefits Of Amavasai

Amavasai: அமாவாசையன்று எதையெல்லாம் செய்யலாம் எதையெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jan 03, 2024 09:20 PM IST

அமாவாசை தினங்களில் நாம் செய்கிற வழிபாடுகள் அனைத்துமே நமது முன்னோர்களைப் போய்ச் சேரும் என்றும் நம்பப்படுகிறது.

அமாவாசை பலன்கள்
அமாவாசை பலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அமாவாசைக்கு 'பிதுா்திதி' எனும் பெயரும் உண்டு. இந்நாளில் அசைவ உணவு சாப்பிடக் கூடாது. சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால் இந்நாளை 'மறைமதி' என்றும் சொல்வதுண்டு. அமாவாசை தினங்களில் நாம் செய்கிற வழிபாடுகள் அனைத்துமே நமது முன்னோர்களைப் போய்ச் சேரும் என்றும் நம்பப்படுகிறது.

ஓர் வருடத்தில் 12 அமாவாசைகள் வரும். அவற்றில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசைகள் மிக மிக முக்கியமான அமாவாசைகளாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று அமாவாசைகளிலும் குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் 'மகாளய அமாவாசை' மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நாளில் பித்ரு லோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் பூலோகம் வந்து நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

பொதுவாக அமாவாசை நாட்களில் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், ஊறவைத்த பச்சாிசி, வெல்லம் கலந்தும் கொடுக்கலாம். கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவற்றை கொடுத்து உதவி செய்யலாம். காலையில் குளித்து முடித்தவுடன் சூரிய பகவானை வணங்குங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

நகம், முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. இதையெல்லாம் அமாவாசையன்று கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் பொங்கும் என்பது நம்பிக்கை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்