Padhma Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Padhma Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!

Padhma Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!

Kathiravan V HT Tamil
Jul 08, 2024 05:32 PM IST

Padhma Raja Yogam: தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இணையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் விளங்குகின்றது. எதிரிகளின் செல்வத்தை இந்த யோகம் கொடுக்கும். வம்பு, வழக்குகளில் நீதிமன்ற வெற்றிகளை பெற இந்த யோகம் துணை புரியும்.

Padhma Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
Padhma Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!

போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் யோகங்களில் ஒன்றாக பத்மராஜ யோகம் உள்ளது. பதவி,பெயர், புகழ், முன்னேற்றங்களை தரும் யோகங்களில் முதன்மையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் உள்ளது. 

தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இணையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் விளங்குகின்றது. எதிரிகளின் செல்வத்தை இந்த யோகம் கொடுக்கும். வம்பு, வழக்குகளில் நீதிமன்ற வெற்றிகளை பெற இந்த யோகம் துணை புரியும். 

ஒருவருக்கு பத்மராஜ யோகம் அமைய உங்கள் ஜாதகத்தில் 4ஆம் மற்றும் 5ஆம் அதிபதிகளின் ஆதரவு தேவைப்படும். 

4ஆம் இடம் என்பது பட்டம், பதவி, அந்தஸ்து, வெற்றி, ரகசிய நடவடிக்கைகள், சொத்து, சுகம் சேர்க்கை உள்ளிட்டவற்றை குறிக்கும் இடமாக உள்ளது. 5ஆம் இடத்திலும் இதற்கு நிகரான பலன்களை கொடுக்க முடியும். 

4ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் இணைந்து 4ஆம் இடத்திலோ அல்லது 5ஆம் இடத்திலோ இருப்பது. 

4ஆம் அதிபதி 5ஆம் இடத்திலும், 5ஆம் அதிபதி 4ஆம் இடத்திலும் பரிவர்தனை பெற்று இருப்பது. 4ஆம் இடத்திலோ, அல்லது 5ஆம் இடத்திலோ யாரேனும் ஒருவர் ஆட்சி பெற்று மற்றொருவர் அவரை பார்ப்பது, பரஸ்பரம் இவர்களுக்கு ஒருவரை ஒருவர் 4ஆம் இடத்தில் இருந்தபடியோ அல்லது 5ஆம் இடத்தில் இருந்தபடியோ பார்பதன் மூலம் பத்மராஜ யோகம் உண்டாக காரணமாக அமைகின்றது. 

மேஷ லக்னம் - சூரிய, சந்திரன் தொடர்பு 

ரிஷபம் லக்னம் - சூரியன், புதன் தொடர்பு 

மிதுனம் லக்னம் - புதன், சுக்கிரன் தொடர்பு 

கடக லக்னம் - சுக்கிரன், செவ்வாய் தொடர்பு

சிம்ம லக்னம் - செவ்வாய், குரு தொடர்பு

கன்னி லக்னம் - குரு, சனி தொடர்பு 

துலாம் - சனி பகவான் தொடர்பு 

விருச்சிகம் லக்னம் - குரு, சனி தொடர்பு 

தனுசு லக்னம் - குரு, செவ்வாய் தொடர்பு 

மகரம் லக்னம் - செவ்வாய், சுக்கிரன் தொடர்பு 

கும்பம் லக்னம் - புதன், சுக்கிரன் தொடர்பு

மீனம் லக்னம் -  புதன், சந்திரன் தொடர்பு

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

Whats_app_banner