Visagam Nakshatram: ‘கனவுகள் பலிக்கும்! வாக்குகள் நடக்கும்!’ விசாக நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!
”இவர்களுக்கு வரும் கனவுகள் பலிக்க கூடியதாக இருக்கும், இவர்களின் வாக்குகள் பலிதம் ஆகும். இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக கூட இருக்கலாம் ஆனால் உலக அறிவை பெற்றவர்களாக விளங்குவார்கள்”
விசாகம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் சுக்கிரன் ராசியான துலாம் ராசியில் விழுவதால் இந்த நட்சத்திரக்காரர்கள், பார்ப்பதற்கு படபடப்பாக இருப்பார்கள், விசாகம் குருவின் நட்சத்திரம் என்பதால் வேதம், சாஸ்திரங்களில் ஈடுபாடும், தெய்வ பக்தியும் இருக்கும்.
உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் பண்பை பெற்ற இவர்களின் பேச்சு சாதூர்யமானதாக இருக்கும். இவர்களுக்கு சில இடங்களில் கர்வம் வெளிப்பட்டாலும், எப்போதும் எளிமையாக பேசுவார்கள்.
இவர்களுக்கு வரும் கனவுகள் பலிக்க கூடியதாக இருக்கும், இவர்களின் வாக்குகள் பலிதம் ஆகும். இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக கூட இருக்கலாம் ஆனால் உலக அறிவை பெற்றவர்களாக விளங்குவார்கள். யாரையும் முழுமையாக நம்பாத இவர்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
கால் அற்ற நட்சத்திரமான விசாகம், ராட்சர கணத்தை சார்ந்து உள்ளது. பெண் நட்சத்திரமான விசாகத்திற்கு உரிய நட்சத்திரமாக பெண் புலி உள்ளது. இவர்களின் விருட்சமாக விலா மரமும், பறவையாக செங்குருவியும் உள்ளது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்காசிக்கு அருகில் உள்ள பண்மொழி முத்துக்குமாரசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட சகல நன்மைகளையும் பெறலாம். விசாகம் நட்சத்திரக்கார்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சிவன், பெருமாள், முத்துக்குமார சாமி கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதும் சிறப்பான பலன்களை ஏற்படுத்தி தரும்.
முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக விசாகம் உள்ளது. இவர்களுக்கு முதல் தசையாக குரு மகா தசை நடக்கிறது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சனி தசை; சனிபுத்தி, கேது தசை; கேது புத்தி, சூரிய தசை; சூரிய புத்தி, செவ்வாய் தசை; செவ்வாய் புத்தி, ராகு தசை; ராகு புத்தி ஆகியவை நிறைய நன்மைகளை செய்யும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான வசிய நட்சத்திரமாக சித்திரை நட்சத்திரம் உள்ளது.
அனுசம், பூசம், உத்திரட்டாதி, மகம், அஸ்வினி, மூலம், கிருத்திகை, உத்திரம், உத்ராடம், மிருகசீரிசம், அவிட்டம், சித்திரை, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 15 நட்சத்திர நாட்களில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிடைக்கும்.
விசாகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் கருத்தை பிறர் மீது திணிப்பதில் வல்லமை கொண்டவர்களாக விளங்குவார்கள்.
விசாகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தை பத்திரமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள்.
விசாகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் தர்கம் செய்வதில் வல்லவர்களாக விளங்குவார்கள்.
விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறர் மீது எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.