Uthirattathi Nakshatram: ‘கேட்டதை கொடுக்கும் காமதேனுவின் அருள் பெற்றவர்கள்!’ உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!
”உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேட்டதை கொடுக்கும், காமதேனுவின் கடாட்சம் இருக்கும்”
சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களின் ஒன்றான உத்திரட்டாதி நட்சத்திரம், குருவின் வீடான மீன ராசியில் உள்ள முழு நட்சத்திரம் ஆகும்.
நேர்மைக்கு உரிய கிரமாக சனி பகவானும், அறிவுக்கு உரிய கிரமாக குரு பகவானும் விளங்குகின்றனர். அந்த வகையில் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுபூர்வமாக வாதிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு நல்ல நண்பர்களும், அதே நேரத்தில் தீய நண்பர்களுக்கும் இருப்பார்கள். சராசரியாக படிப்பவர்காக இருந்தலும் பொது அறிவு மிக்கவர்களாகவும், விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை இவர்கள் அதை விடமாட்டார்கள். லகிரி வஸ்துக்கள் மீது இவர்களுக்கு அபரிவிதமான ஈடுபாடு இருக்கும்.
உத்ரட்டாதி நட்சத்திரக்கார்களுக்கு காதுகள் விரிந்து, மார்புகள் அகன்றும் இருக்கும், கடும் உழைப்பாளிகளான இவர்கள் உடலாலும், மனதாலும் உறுதி கொண்டவர்கள்.
சத்வ குணம், தமோ குணம், ரஜோ குணம் ஆகிய மூன்று குணங்களையும் ஒருங்கே பெற மனுஷ கணம் கொண்ட நட்சத்திரமாக உத்ரட்டாதி உள்ளது.
பெண் நட்சத்திரமான உத்ரட்டாதியின் விலங்கு பசு ஆகும். காமதேனுவே உத்ரட்டாதி நட்சத்திரத்தில்தான் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றது. உத்ரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சம் வேம்பு மரம், இதற்கு உரிய பறவை கோட்டன் பறவை ஆகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள தீவத்தூர் எனும் ஊரில் உள்ள சகஸ்வர லட்சுமி ஈஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய சகல நன்மைகளையும் பெறலாம். உத்ரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்தாலும் நல்ல நன்மைகளை பெற முடியும்.
உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சனி மகா தசை வருகிறது. இவர்களுக்கு புதன் மகாதசை; புதன் புத்தி, சுக்ர மகாதசை; சுக்ரபுத்தி; சந்திர மகாதசை; சந்திரபுத்தி, ராகு மகாதசை; ராகுபுத்தி, குரு மகாதசை; குருபுத்தி ஆகியவை அதிக நற்பலன்களை வழங்க காத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த கிரகங்கள் உங்கள் லக்னத்திற்கு யோகாதிபதிகளாக வந்தால் இரட்டிப்பு பலன்களை எதிர்பார்க்கலாம்.
உத்ரட்டாதி நட்சத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக, உத்ரம் நட்சத்திரம் உள்ளது.
உத்ரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள், ஆளுமை திறன் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
உத்ரட்டாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுமையும், சாந்தமும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
உத்ரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துவமாகவும், குடும்பத்தினர் மீது அதிக அக்கறை செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
உத்ரட்டாதி நான்காம் பாதத்தில் உள்ளவர்கள் ரகசியங்களை கண்டுபிடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ரேவதி, ஆயில்யம், கேட்டை, பரணி, பூராடம், பூரம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களை தொடங்கினால் வெற்றி கிட்டும்.
உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேட்டதை கொடுக்கும், காமதேனுவின் கடாட்சம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.