Uthiram Nakshatram: ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!
”உத்திரம் நட்சத்திரம் ஆத்மகாரகனான சூரியனின் நட்சத்திரம் என்பதால், சூரியனின் குணநலன்கள் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். புகழ், கீர்த்தி, பெருந்தன்மை ஆகியவை இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்”
சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்றான உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சூரியனின் ராசியான சிம்ம ராசியிலும், 2, 3, 4 ஆவது பாதங்கள் புதனின் ராசியான கன்னி ராசியிலும் உள்ளது.
உத்திரம் நட்சத்திரம் ஆத்மகாரகனான சூரியனின் நட்சத்திரம் என்பதால், சூரியனின் குணநலன்கள் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். புகழ், கீர்த்தி, பெருந்தன்மை ஆகியவை இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.
வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக பார்க்க கூடிய இயல்பு இவர்களுக்கு இருக்கும் .
சிக்கனவாதிகளான இவர்கள் தேவை இல்லாமல் செலவுகளை செய்யமாட்டார்கள். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்னை கொண்ட இவர்களுக்கு ஒழுங்காக பொய் சொல்ல தெரியாது.
உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சூரியன் ராசியான சிம்மத்தில் வருவதால் இவர்களுக்கு தனித்தன்மையும், அறிவு முதிர்ச்சியும் கூடுதலாக இருக்கும்.
உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியாக இருந்தால் பணம் தானாக சேரும்.
உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிதனத்தால் வாழ்கையில் வெற்றி பெறுவார்கள்.
உத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக தங்கள் வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள்.
தலையற்ற நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரம் மனுஷ கணம் கொண்ட ஆண் நட்சத்திரமாக விளங்குகிறது.
நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு
உத்திரம் நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு எருது ஆகும், உரிய விருட்சமாக அலரி மரம் உள்ளது. உரிய பறவையாக கிலுவை பட்சி உள்ளது.
உத்திரம் நட்சத்தில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகே உள்ள இடையாற்று மங்கலம் பகுதியில் உள்ள மங்கலேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்து வர அனுகூலங்கள் கிடைக்கும். மேலும், உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் தொடர்ந்து வழிபாடுகள் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில்தான் சூரிய பகவான் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சூரிய மகா தசை வருகிறது.
நட்சத்திரத்திற்கு அனுகூலம் தரும் தசைகள்
சந்திர மகா தசை; சந்திர புத்தி, ராகு மகா தசை; ராகு புத்தி, சனி மகா தசை; சனி புத்தி, கேது மகா தசை; கேது புத்தி, சுக்கிர மகா தசை; சுக்கிர புத்தி காலங்கள் அனுகூலமாக பலன்களை பெற்றுத்தரும்.
உத்திரம் நட்சத்திரத்திற்கு உரிய வசிய நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது.
வெற்றியை தரும் நட்சத்திர நாட்கள்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, ரோகிணி, திருவோணம், அஸ்தம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுசம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிட்டும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.